ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப் போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்துச் சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்? மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப் போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி-யாட்டம் பேசுறான் என்பாள். இதெயெல்லாம் மனிதனுக்குச் சுதந்திரம் ஏற்பட்ட பிறகு _ மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். உலகம் இன்னும் எவ்வளவோ மாறிக்கிட்டு வரப்போவுது.