Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் திடல் வாங்கிய கதை!

ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு.  எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றிக் கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள்.  ஒன்னும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிக்கிறேன்.  நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை.  சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு இலையில் உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட்டவன்தான்.  என்னால் ஆனவரைக்கும் தடுப்பேன்.  அவரு வேலைக்காரன் தானே எனக்கு அதிகமாகப் போட்டுட்டுப் போயிடுவான்.  (சிரிப்பு) அது அவருக்கு வேடிக்கை.  போடுங்கிறேன். அவரு திங்கிறாரா இல்லையான்னு பார்ப்பார்.  அப்படி ரொம்ப எங்கள் இருவருக்கும் பழக்கமாயிடுச்சி.  அதனாலே இந்த வேடிக்கையை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறதுதான்.  அது என்னைப் பற்றிச் சொல்லுகிறதுக்குப் (என்னை) பாராட்டுவதிலே அது அவருக்கு ஒரு முறை அவ்வளவுதான்.  (கைத்தட்டல்  சிரிப்பு) வேறு சில விஷயங்களையும் அவரு சொன்னாரு.  முக்கிய விஷயத்தையும் நான் சொல்றேன்.  இந்த இடம் (பெரியார் திடல்) அவர்  ஜி.டி. நாயுடுகாரு) வாங்கிக் கொடுத்தது.  (பெரியார் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருகிறது ஆனாலும் பேச்சு தொடர்கிறது).  ஆரம்பத்திலே நான் வேண்டான்னுட்டேன்.  இதற்கு முன்பே என்கிட்டே விலைக்கு வந்தது.  வந்து சொன்னாங்க வாங்கலாம்னு.  பின்னால் அவர் வாங்கிட கட்டாயப்படுத்தவே _ -இயக்கத்துக்காக வாங்கினேன்.