வழக்குரைஞர்கள் தங்களது தொழில் கவுரவத்தை உயர்த்த வழி தேடாமல் பணம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். லாபத்தை முக்கிய நோக்கமாகக் கருதாததால்தான் வக்கீல் தொழில் சேவை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் வக்கீல் தொழில் வணிகமயமாகிவிட்டது. இந்தப் போக்கு சரியானது அல்ல. சமூக மாற்றம் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது சட்டங்கள் மாற்றப்படும்வரை அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க சாத்தியமில்லை.
– கபில் சிபல், மத்திய சட்ட அமைச்சர்
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும். இந்தச் சட்டம் பல்லில்லாத ஒன்றாக இருக்கக் கூடாது. மக்களின் பல நம்பிக்கைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் அரசியலுக்குப் பயன்படுத்தும் சக்திகளை எதிர்க்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
– பேராசிரியர் இராமானுஜன கணித அறிவியல் நிறுவனம்.
கோவையில் தந்தை பெரியார் அவர்கள் கூட்டத்திற்குச் சென்றேன் .அக்கூட்டத்தில் பெரியார் பேசினார்: ஒரு விவசாயியைப் பார்த்துக் கேட்டேன் எத்தனை குழந்தைகள் என்று. அந்த விவசாயி சொன்னார், கடவுள் எனக்கு 5 குழந்தைகளைக் கொடுத்திருக்கிறார் என்று. பெரியார் கேட்டார், 5 குழந்தைகள் கடவுள் கொடுக்கிற வரையில் நீ ஏன் திண்ணையில் படுத்துக் கொண்டு இருந்தாய் என்று பேசினார். அடுத்த தலைமுறை அறிவுடைய சமுதாயமாக மலர தொடர்ந்து பாடுபட்டவர் பெரியார். அப்படி அடுத்த தலைமுறைக்கு நல்ல பூமியைத் தர வேண்டும், நல்ல வாழ்க்கையைத் தரவேண்டும், மாசு, நஞ்சு இல்லா உலகைத் தரவேண்டும் எனில், மானுடப் பற்றாளர்களாம் பெரியார் தொண்டர்களும் இயற்கை ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றுவோம்.
மூடநம்பிக்கையை முற்றாக ஒழிக்க வேண்டும், இன்று ஓரளவிற்குச் சிந்திக்கிறோம் என்றால் அதற்கு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தான் காரணம்.
-நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி
Leave a Reply