Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினைத் தன்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறார். குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்க வேண்டாம்; நம்முடைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னார்.

இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதைச் செய்யக்கூடாது.

ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட்டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.

இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்தச்  செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

– பேராவூரணியில் 8.9.2013 அன்று நடைபெற்ற தி.க.வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி.