Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதுபோதை, சினிமா போதை, கோவில் திருவிழா, அரசியல் கட்சித் தேர்தல், கல்வியில் மூடநம்பிக்கை இவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றன. நாடு வளர்ச்சியடைகிறதாக ஆட்சியாளர்கள் புள்ளி விவரத்தைக் காட்டுகிறார்கள். விவசாயம்  மட்டும் தேய்ந்து போனது ஏன்? கடந்த 15 ஆண்டுகளில் 2.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளில் 38 கோடி மக்கள் தினமும் உணவின்றி படுக்கச் செல்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தேசிய அவமானமல்லவா!

– நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி

பிறமொழிகளில் உள்ள சிறந்த நூல்கள், நூல்கள் வந்து சில மாதங்களிலேயே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகன்றன. ஆனால், இதே நூல்கள் தமிழ் மொழியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகே மொழிபெயர்க்கப் படுகின்றன. இந்தியாவில் உள்ள வேறு மொழி நூல்கள்கூட ஆங்கிலம் வாயிலாகவே தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு என்பது மிக அரிய கலை ஆகும். தமிழகத்தில் புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வரவேண்டும்.

_அவ்வை நடராஜன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

மாணவர்கள் சரித்திரம், வேதியியல், பூகோளம், ரசாயனம், கணிதம் போன்ற பாடங்களுடன் கட்டாயம் இயற்கை இடர்ப்பாடுகள் போன்ற காலங்களில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை மேற்படிப்புக்கு ஓர் அடிப்படைத் தகுதியாக எப்போது நிர்ணயிக்கிறோமோ அப்போதுதான் நமது சமூகம் மேம்படும்.

– வி.ராமசுப்பிரமணியன், நீதிபதி, உயர் நீதிமன்றம்.