’சோ’த்தபய ராம’பக்‌ஷே

ஆகஸ்ட் 16-31 - 2013

துக்ளக்கின் துதிபாடும் பயணம்

தமிழின அடையாளத்தை அழிக்கும் சிங்கள மயமாக்குதல்

மகா.தமிழ்ப் பிரபாகரன்

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர் முன்னாள் பெண் புலிகளா?

 

இப்படி இனவெறி இலங்கை ராணுவத்தைப் போற்றி தமிழர்களைத் தூற்ற அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் கிளிநொச்சி பெண்கள் ராணுவ முகாமுக்கு விரைகிறது சோத்தபய ராமபக்க்ஷே குழு.

இந்திரா காந்தியை வீழ்த்தியவனைச் சார்ந்த சமூகம், நாட்டில் பிரிவினை கோரியவர்களைச் சார்ந்த சமூகம் என்று ஒரு சிலருக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்காமல், பெருந்தன்மையுடன் ஒரு சீக்கியரைப் பிரதமராக்கியுள்ளது இந்தியா. காந்தி பிறந்த இந்தியா காட்டும் பெருந்தன்மையைத்தான், நாங்கள் இலங்கை அரசிடமும் எதிர்பார்க்கிறோம். புலிகள் போகட்டும், இங்கிருக்கும் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கட்டும் என்ற ஆனந்த சங்கரியை இந்திரா காந்தியைக் கொன்றவர் சீக்கிய இனத்தவர் என்று தெரிந்தும் பெருந்தன்மையோடு சீக்கியரையே பிரதமராக்கிய இதே இந்திய காங்கிரஸ்தான், ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்றார்கள் என்ற சுப்ரமணிய சுவாமி கூற்றைப் பரப்பும் விதமாய் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி அதிகாரம் கிடைக்கப் பெற்றதும் தமிழர்களைக் கொன்று குவிக்கும் திட்டத்தை வகுத்தது. இதை இலங்கை ரத்த நிலத்தில் அரசியலில் இருந்து தெரிந்து கொள்ளாத ஆனந்த சங்கரி, இனவேறுபாட்டால் உரிமை கேட்டதால் படுகொலை செய்யப்பட்டவர்கள்மீது நின்று அரசியல் செய்வதால்தான் பண்பற்ற கொலைகாரர்களிடமே உரிமைப் பிச்சை கேட்கிறார்.

இந்த வஞ்சக அரசியல் நகைப்பாளரைக் கண்டுவிட்ட பிறகு, சோத்தபய குழு கிளிநொச்சியில் உள்ள உணவு விடுதியில் உணவருந்திய பொழுது இலங்கை ராணுவத்தில் தற்போது இந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 102 தமிழ் இளம்பெண்கள் அப்படி ராணுவத்தில் இணைந்துள்ளனர். விசேஷம் என்னவென்றால், அதில் ஒரு சிலர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். கிளிநொச்சி பெண்கள் பிரிவு ராணுவ முகாமுக்குப் போனால், அவர்களில் பலரைச் சந்திக்கலாம் என்றாராம் ஒருவர்.

உடனே சோத்தபய குழுவும் ராணுவ முகாம் போனதாம். பார்க்கணும்னு அனுமதி கேட்டு முயற்சித்ததும், மேஜர் பந்துலா அனுமதி கொடுத்தாராம். அவர் சொன்னாராம், நாங்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது, இங்கு பறவைகள் தவிர வேறு உயிரினங்கள் கிடையாது. வெறிச்சோடிக் கிடந்தது. புலிகள், இப்பகுதி மக்களைத் தங்களுக்கு அரணாகத் தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனாலும், இங்கிருக்கும் வீடுகளையோ, ஹிந்துக் கோவில்களையோ ராணுவம் துளியளவும் சேதப்படுத்தவில்லை.

இறுதிப் போர் முடிந்த இந்த நான்கு வருடங்களில்,1 லட்சத்து 35 ஆயிரத்து 605 தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் 1.75 மில்லியன் பணத்தை கிளிநொச்சி மறுவாழ்வுக்கென ஒதுக்கிச் செலவு செய்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்று. மேலும் கடைசியாக அவர் ஒன்று சொன்னாராம், ராணுவத்தின் வேலை பயங்கரவாதத்தை அழிப்பது மட்டும்தானே தவிர, தமிழர்களை அழிப்பது இல்லை. போர் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது ராணுவத்தின் லட்சியம், இங்கு அய்ந்து செயற்பாடுகளை ஏற்படுத்துவதுதான். ஸிமீலீணீதீவீறீவீணீவீஷீஸீ, ஸிமீவீஸீமீரீக்ஷீணீவீஷீஸீ, ஸிமீநீஷீஸீக்ஷீநீவீஷீஸீ, ஸிமீமீறீமீனீமீஸீ, ஸிமீநீஷீஸீநீவீறீவீணீவீஷீஸீ  (மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறுகுடியேற்றம், மறு சமாதானம்) ஆகிய அய்ந்தும்தான் இப்போதைய எங்கள் லட்சியம். அதை நிறைவேற்றுவோம். எல்லாவற்றையும் தீர்க்கதரிசனத்தோடு பார்க்கும் சோத்தபய குழுவிடம் எல்லாவற்றுக்கும் சரியாகக் கணக்குச் சொல்லும் ராணுவ அதிகாரி,  இந்த மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறு குடியேற்றம், மறு சமாதானம் ஆகியவைக்காக எத்தனை லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்,  – எத்தனை பில்லியன் டாலர்களுக்கும் யூரோகளுக்கும் ரூபாய்களுக்கும்  யென்களுக்கும் எத்தனை விதமான ஆயுதங்களும் ரசாயனக் குண்டுகளும் எறிகணைகளும் வாங்கப்பட்டன   என்ற கணக்கைப் பற்றிய பேச்சைப் பேசவில்லையோ?

2006_-2009 வரையிலான இலங்கை உள்நாட்டுப் போரில் ஆயுதங்களுக்காக 605 பில்லியன் ரூபாய்(இலங்கை மதிப்பீடு) செலவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் இலங்கை சென்ட்ரல் வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்.

போர் முடிந்து ராணுவத்தால் அமைதி மீட்கப்பட்ட இலங்கையில் ஆயுதங்களுக்காக  1487 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என்ற அதிர்ச்சிக் கணக்கை, அண்மையில் ஆசிய மனித உரிமைக் கழகம் குறிப்பிட்டது. அதன்படியும் போரில் செலவிடப்பட்ட தொகையின் அளவுப்படியும் பார்ப்போமேயானால் 0.05 சதவீதம் கூட தமிழ் மக்களின் வாழ்வாதார மீள் கட்டமைப்புக்காக இலங்கை அரசு  செலவு செய்யவில்லை. இப்படி, பொய்யான மறுவாழ்வையும் மறு சீரமைப்பையும்தான் இலங்கை அரசு தமிழ் மக்களுக்குச் செய்து வருகிறது.

துக்ளக்கிடம் பேசிய ராணுவ அதிகாரி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு குடியிருக்கிறார்கள், சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்கிறார். அய்ந்து லட்சத்துக்கும் அதிகமான ஆட்பலத்தைக் கொண்டுள்ள இலங்கை ராணுவத்தில் 0.1 சதிவீதம்கூட தமிழர்கள் யாரும் இல்லை என்ற கணக்குத் தெரியாததால்தான் சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்று சொன்னதை அப்படியே குறிப்பிட்டுள்ளது துக்ளக். இந்த ராணுவ அதிகாரி குறிப்பிடுவது  போல் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் ராணுவம் மட்டுமில்லை, ராணுவத்தின் குடும்பங்களும் இருக்கிறது. அவர் வாதத்தின்படியே வருவோம், இதற்குப் பெயர் சிங்களக் குடியேற்றம் இல்லையா? ராணுவத்தில் இருப்பது எல்லாம் சிங்களவர், வட கிழக்கில் ராணுவம் மட்டும்தான்  இருக்கிறது என்றும் சொல்கிறார். அப்படியெனில் இதைச் சிங்களக் குடியேற்றம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது ராணுவ மயமாக்கல் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது சிங்களக் குடியேற்றம், ராணுவ மயமாக்கல் மட்டுமல்ல. மறு சமாதான ரீதியிலான இன அழிப்பு. இந்த மறுசமாதான ரீதியிலான இன அழிப்பு நீட்சிகளின் ஆதாரங்களையும், இலங்கையின் வடகிழக்கில் நடந்து கொண்டிருக்கும் அத்துமீறல், செயல்பாடுகளின் விவரங்களையும், புலித்தடம் தேடி… என்ற எனது 25 நாள்கள் இலங்கைப் பயணத் தொடரிலிருந்து குறிப்பிடுகிறேன்.

சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத்தமிழ் சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை எனது பயணத்தில் அறிய முடிந்தது.

கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய ராணுவம், கருத்தடை ஊசிகளைத் திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும். தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தில் சேர்ப்பதும், ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக்காட்ட நினைக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது ராணுவம். (துக்ளக்கிடம் கூறிய ராணுவ அதிகாரியின் வாதப்படி, இதைத் தமிழ்ப் பெண்களுக்கான மறுவாழ்வு என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.)

தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்குச் சென்றாலும் ராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. காதலிக்கும்படிக் கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது. (துக்ளக்கின் கருத்துப்படி ராணுவம் பின் தொடர்வது அப்பெண்களின் பாதுக்காப்புக்காககூட இருக்கலாம். பிணங்களைக் கற்பழிப்பவர்கள் எல்லாம் பயங்கரவாத ஒழிப்பாளர்கள்தானே சோவுக்கு).

தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது, 30 ஆயிரம் சம்பளம் உள்ள ராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்தால் 60 ஆயிரம் கிடைக்கும். இந்தச் சம்பள உயர்வு இனக்கலப்பின் விதைக்காக! போர்க்காலத்தில் ராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்படியாவது சம்பள உயர்வைப் பெறலாம் என ராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலைகின்றனர். இந்தச் செயல்திட்டப்படியே தமிழ்ப் பெண்கள் ராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர்.

சோத்தபய குழு குறிப்பிடுவதாவது: இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்தத் தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள். ராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் வயதே, சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணம் என்ற ராணுவச் செயல்திட்டத்துக்கான சிறந்த ஆதாரம்.

கொலைகளும் கற்பழிப்புகளும் புரிந்த ராணுவம் இன்று அமைதியையும் அரவணைப்பையும் போதிக்கிறது. வெறிப் பிடித்து ரத்தம் குடித்த இனவாதம் இன்று சர்வ சாந்தமாக இருக்கிறது – ஆறே நாட்களில் இலங்கையை ஆய்வு செய்த சோத்தபய குழுவின் சத்திய வாக்கு.

– உண்மைகள் கசக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *