துளிச் செய்திகள்

ஆகஸ்ட் 16-31 - 2013
  • வானிலையைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்காக இன்சாட் 3டி என்ற செயற்கைக் கோளினை ஜூலை 26 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க ஜூலை 30 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகின்றன.

  • டில்லி பட்லா ஹவுஸ் என்கவுன்டர்  வழக்கில் இந்திய முஜாஹி தீன் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட ஷாஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் ஜூலை 30 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 1 அன்று ஒப்புதல் அளித்தது.
  • பாகிஸ்தான் நாட்டின் 12ஆவது அதிபராக உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்த மம்னூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *