– ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்
பஃறுளி, குமரி போன்ற தமிழர்களுடைய புலப்பெயர்களோடு தொடர்புபடுத்தி நாம் பேசிக்கொண்டிருக்கிற பெயர்கள் பன்னிரு நிலம் என்று சொல்லுகிற செந்தமிழ் சிவனிய பன்னிரு நிலம் செந்தமிழ் பேசப்பட்ட இடம், கொடுந்தமிழ் பேசப்பட்ட இடம், வட்டார வழக்குப் பகுதிகள்னு சொல்லி பன்னிரு உரையாசிரியர்கள் எல்லாம் சொல்லுவாங்க.
தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேங்கூலி, பன்றி, அருவா, வடதலை நாடு, கூலிநாடு, மலாடு இப்படின்னு சொல்லுவார்கள். பன்றி நாடு, கற்கா நாடு. இந்தப் பன்னிரு நிலங்களின் அடையாளங்களை தமிழ்நாட்டில் யாரும் எந்த இடத்திலும் காட்ட முடியாது. ஆனால், பன்னிரு நிலங்களினுடைய பெயர்களும் தனித்தனி ஊர்ப் பெயர்களாக இந்தப் பகுதியில்தான் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் பதிவான பெயர்கள், சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய ஊர்ப் பெயர்கள், போர்க்களங்களினுடைய பெயர்கள், துறைமுகங்களினுடைய பெயர்கள், மன்னர்களுடைய பெயர்கள், அவர்களுடைய குடிப்பெயர்கள், குறுநில மன்னர்களுடைய பெயர்கள், அவர்களது ஊர்ப்பெயர்கள், காடுகளுடைய பெயர்கள், இந்தப் பட்டியலெல்லாம் ஊர்ப் பெயர்களாய் அங்கு இன்றுவரை உள்ளன. தமிழ்நாடு கல்வெட்டுகளில் இருக்கக்கூடிய பெயர்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட கி.மு.4ஆம், 5ஆம் நூற்றாண்டிலேயே பதிவாகி விட்டன என்பதில் எந்தவிதமான அய்யமும் இல்லை. ஏனென்றால், அதற்குத் தேதி கொடுத்தாயிற்று.
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் இருக்கக்கூடிய பெயர்கள் அந்த இடத்தில் இருக்கிறது என்று சொன்னால், இந்தப் புலப்பெயர் குறைந்தபட்சம் கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதில் எந்தவிதமான அய்யமுமில்லை. அந்த வகையில் ஒரு தேதியை நாம் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருக்கு. சங்க இலக்கியம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் எந்த அய்யமும் இருக்கக்கூடாது. அதனால்தான் சங்க இலக்கியப் பெயர்கள் தமிழ் பிராமி கல்வெட்டோடு குறிக்கப்பட்டிருக்கிற பெயர்கள். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி நடந்து இருக்கக்கூடிய இடங்கள் உதாரணமாக ஆதிச்சநல்லூர் வீரை, அல்லது திருந்தூர் என்ற இடம் திருநெல்வேலியில் இருக்கிறது. அங்கு கொற்கை மாதிரி திருந்தூர் என்கிற இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அந்த திருந்தூர் போன்ற பெயர்கள், எங்கு அகழ்வாராய்ச்சி நடந்திருக்கிறதோ அந்த ஊர்களுடைய பெயர்கள், எங்கு மட்பாண்டக் குறியீடுகள் கிடைத்திருக்கின்றனவோ (சிந்துவெளிக் குறியீடுகள்) அந்த ஊர்களினுடைய பெயர்கள், அப்படியென்றால் அதற்கு ஒரு தேதி கிடைத்துவிடுகின்றது.
அதற்காக இதை நான் எடுத்துக் கொண்டேன். காடுகள், சங்ககால அரசியல் தொடர்பான பெயர்கள், தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள், குடிகள், முடிமரபினர்கள், சேர, சோழ, பாண்டியர், அதியர், ஆய்க்குடி, வேளிர்- இந்த மாதிரி.
முடி மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள், வேளிர் மரபோடு தொடர்புடைய கதைகள், கண்ணகி மரபோடு தொடர்புடைய கதைகள், முருகனின் அறுபடைவீடோடு தொடர்புடைய பெயர்கள், முருகன் வழிபாட்டோடு தொடர்புடைய பெயர்கள், முருகன் தமிழ்க் கடவுள், முருகனுடைய மலை என்று நாம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த மலைகளோடு தொடர்புடைய பெயர்கள் இவைகளெல்லாம் ஆகும்.
கண்ணகி மரபு என்றால் பூம்புகார், கண்ணகி_கோவலன், மாசாத்துவான். மாசாத்து என்றால்? சாத்து _ வணிகச் சாத்தினுடைய தலைவன் என்று பொருள்னு சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நிறைய கற்பிதங்கள் இதில் அடிபட்டுவிடுகின்றன. ஏனென்றால், கரிகாலன் என்பது ஊர்ப்பெயர், அதியமான் என்பது ஊர்ப்பெயர். கரிகாலன் என்பது ஊர்ப்பெயர் என்பது உண்மை என்றால், அவனது கால் கருகவில்லை என்பதுதான் உண்மை. நத்தக் காடையூர் என்ற ஊர். அங்கு கொங்கு வேளாளர்கள் கூட்டம் பெயர்களெல்லாம் இருக்கும். பைரன் கூட்டம், தூரன் கூட்டம், காடைக் கூட்டம், மணியன் கூட்டம். அதில் இருக்கக்கூடிய காடைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் கோயிலில் சிற்பங்களே வைத்து இருப்பார்கள். தோளில் ஒரு காடையன் உட்கார்ந்திருக்கிற மாதிரி நத்தக் காடையூரில் வந்து யானைகளைத் தாக்குவது மாதிரியான சிற்பங்கள் வைத்திருப்பார்கள். அந்த மாதிரியான ஊர்களினுடைய பெயர்களெல்லாம் சிந்துவெளிப் பகுதியில் இருந்து வந்த பெயர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும்போது, கடைசியாக அங்கு இருக்கக்கூடிய பட்டக்காரர்களுடைய பெயர்களில் சர்க்கரை இருக்கும். அந்த சர்க்கரைப் பட்டக்காரர்களுக்கு நிறையப் பேர் நேரிசை வெண்பாவே எழுதியிருக்கிறார்கள். ஏன் சர்க்கரை என்ற பெயர் வந்ததென்றால்… இவருக்கு புவிக்கும், செவிக்கும் சான்றோர் அவிக்கும் ரொம்ப சுவையாய் இருந்ததனால் சர்க்கரை என்ற பெயர் வந்ததென்று சொல்வார்கள்.
நன்றா, அகற்பா, ஏழில், குடப்பாலி, நேரி என்பது ஒரு மலை. இந்த மாதிரியான புனல், சிலம்பாறு என்பது அழகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. இது தமிழ்நாட்டினுடைய சங்ககால குணக்கடல், குடக்கடல், சங்ககாலத் தமிழகத்தினுடைய வடவேங்கடம், தொண்டைப் பகுதி, கொங்குப்பகுதி, தகடூர், மலாடு இவையெல்லாம். கோடைமலை, பொதினி மலை, தோன்றி மலை, கண்டிரம் மலை, தொட்டி மலை, தோட்டி மலை, அய்ரை மலை இவற்றையெல்லாம் பொருத்தி தமிழகத்தினுடைய பழங்கால வரைபடத்தைத் தயாரித்து இருக்கிறோம். ‘The Representative Sample Map’ -_ -_ இது மாதிரியான கிட்டத்தட்ட 50, 60 வரைபடங்களைத் தயாரித்துக் கொண்டு எனது தமிழ் அட்லஸ் வரைபடத் தொகுப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதில் உள்ள காவிரி, யாலூர், தாமூர் -_ தாமூரைப் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்பு இருக்கும்.
ஏரை _ ஏரை கோன் என்ற குறுநிலத் தலைவன், பாண்டியன், பன்றி நாடி, ஈழம், வன்னி, நொச்சி, யாலூர், பொதி, போசர், கல்சார் பற்றி அகநானூற்றில் புலவன் மதுரை மருதனிளநாகனார் என்ற ஒரு புலவன். தொல்பொருள் கல்லூர் அப்படியென்று இணைத்து ஒரு மீள் நினைவாக தொல்பொருள் கல்லூர். இன்றைய, நேற்றைக்கு உள்ள கல்லூர் கிடையாது. ரொம்ப நாட்களுக்கு முன்னால், நெடுங்காலத்திற்கு முன்னால் புகழ்பெற்றிருந்த பழைய நகரம் என்று சொல்லுவார்கள். அந்தக் காலத்தில் அகப்பாடலில் ஒரு செய்தியை நினைவு கூறுவான். என்ன நினைவு கூறுவான் என்றால், இது வந்து மருத நிலப்பாடல். மதுரைக்குப் பக்கத்தில் வைகை அகன்றுகிட்ட நடக்குதாம். மதுரைப் புலவன் சொல்லுகிறான். (தோழி) தலைவியைப் பற்றி, தலைவனுடைய நடத்தையைப் பற்றி அலர்தூற்றி மக்களெல்லாம் பேசும்போது மற்ற பெண்களெல்லாம் இதைப் பற்றிய செய்தியைப் பேசி நகைத்தது எப்படி இருந்துச்சுன்னா அப்படின்னு ஒரு ‘Flashback’.. அந்த பிளாஸ் பேக்_கைச் சொல்லி ரொம்ப நாளைக்கு முன்னால் கல்லூர்_னு ஒரு புகழ்பெற்ற ஒரு நகரம் இருந்ததுல. அந்த ஊர்ல இப்படித்தான் ஒருத்தன் வந்து ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். அவர்கள் இரண்டு பேரும் தொடர்பாய் இருந்தார்கள். அதற்குப் பின்னால் அவன் திருமணம் செய்ய மறுத்ததற்குப் பின்னால் ஊர் மக்களிடம் முறையிட்டபோது அந்த ஊர் மன்றம் அவனை அழைத்து, இவளோடு நீ தொடர்புடையாய் என்று கேட்டபோது அவன் நெஞ்சார ஒரு பொய் சொன்னான். எனக்குத் தெரியாதுன்னு.
அவன் பொய் சொல்லுகிறான் என்பதை அந்த மன்றம் அறிந்து கொண்டு அவன் மீது சுண்ணாம்பை ஊற்ற வேண்டும் என்று முடிவு செய்து அவனுக்குத் தண்டனை கொடுத்தபோது அவனைச் சுற்றியிருந்த மக்களெல்லாம் ஓவென்று ஒலி எழுப்பியதைப் போன்ற ஒரு ஒலியை இந்த மக்கள் எழுப்பினார்கள். அப்படின்னு சொல்லி எப்பவோ -_ எங்கயோ நடந்த ஒரு கல்லூர் அப்படிங்கிற ஒரு செய்தியை அகநானூற்றில் இருக்கக்கூடிய ஒரு புலவன் வந்து ஒரு Flasback வைப்பான். இந்தக் கல்லூர், இன்றைக்கு இருக்கிற தமிழ்நாட்டில் நான்கு கல்லூர் இருக்கிறது. இப்படித்தான்னு ஒரு கல்லூர் கொங்கு நாட்டுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கல்லூர்களில் ஒரு முக்கியமான தொல்புகழ் பொருள் சொல்லுறபடியாக எந்தக் கல்லூரும் கிடையாது.
இவை முகவரி தெரியாத சிறிய ஊர்கள்தான் _ சின்ன ஊர்கள்தான். ஆனா இந்தக் கல்லூர் என்பது தமிழ்நாட்டில் கருநாடகத்தில், ஆந்திரத்தில், மகாராஷ்டிரத்தில் இருக்கக்கூடிய இந்தக் கல்லூர் தைமாபாத்துக்கு மிகவும் அருகில் உள்ளதுதான். இந்த சிந்துவெளிக் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற தைமாபாத்திற்கும் அருகிலேயே ஒரு கல்லூர் இருக்கிறது. அந்தக் கல்லூர் சிந்துவெளித் தொன்மங்களோடு தொடர்புடைய ஊர். சங்க இலக்கியத்தில் பதிவு செய்யக்கூடிய மீள்நினைவுகள் என்பது அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றி அல்ல.
இதுமாதிரி மதுரை, இப்படிப்பட்ட பலவகையான இடப்பெயர்கள் சங்ககாலப் பெயர்கள் அங்கிருப்பதை அறிந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஏராளமான ஊர்ப்பெயர்கள் மலை, மலை, என்று முடிகிற மாறி இருக்கும். தோன்றிமலை, பழனி மலை, கவுண்டன் மலை, செம்பன் மலை, சாம்பன் மலை அப்படின்னு ஊர்கள் இருக்கும்.
இது ஏதாவது ஒரு சிறப்புப் பெயரோடு சேர்ந்து இந்த மலை என்கிற பொதுப்பெயரும் சேர்ந்து மலை என்பதே ஒரு மலையின் பெயராக இருக்க முடியாது? தமிழ்நாட்டில் மலை என்பதுதான் தெரியுமே? இது என்னா மலை? அப்ப இது பன்றி மலை, கரடி மலை அப்படின்னு சொன்னால்தான் நமக்குத் தெரியும். ஏன்னா? நிறைய மலைகள் இருப்பதனால் ஒரு மலையிலிருந்து இன்னொரு மலையை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, நாம் அதற்குச் சிறப்புப் பெயர் வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. இது பேரூர், திருப்போரூர், இது ஊர் என்று மட்டும் சொன்னால் நமக்கு விளங்காது. நான் என்ன சொன்னேன். இது ஊர்தான்னு தெரியுமே! என்ன ஊர்னா நான் திருப்போரூர்னு சொல்ல வேண்டிய தேவை இருக்கு. ஆனால் எந்த இடத்தில் தொன்மையான இந்தச் சொற்கள் தோன்றியதோ முதன்முதலாகப் பயன்படுத்த தொன்மையான இடங்களில் சிறப்புப் பெயர்கள் தோன்றுவதற்கு முன்னால் அந்தப் பொதுப்பெயரே தனிப்பெயராக வரும். இது உலகம் முழுவதும் ஊர்ப்பெயர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கண்டறிந்த உண்மை. எந்த இடத்தில் பொதுப் பெயர் தானே ஒரு தனிப்பெயராக வருகிறதோ, அந்த இடத்தில் அதன் பயன்பாடு தொன்மை மிக்கதாக இருக்கும்.
இதனடிப்படையில் இங்கு இருக்கக்கூடிய மலைப்பகுதிகளில் சென்று தேடியபோது பொறை, மலை, வரை, மோடு, கோடை, மறைமலை, குற்று, குன்று, மலை இவைகளெல்லாம் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
பாகிஸ்தான் _ ஆப்கானிஸ்தான் இடப் பெயர்களில் திராவிட மலைச்சொற்கள். இங்கு மலை தமிழ்மொழியைச் சேர்ந்தது. திராவிட மொழியினுடைய வேர்ச்சொல் அகராதி, பசோ, யமுனோ_வினுடைய வேர்ச்சொல் அகராதி, மாழவு என்ற குறியீடு இருக்கக்கூடியது. இது பாகிஸ்தானில் 4777 அடி உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து இருக்கிறது. பிராகுயி மொழியில் மஸ் என்பதற்கு மலை என்று பொருள். இது அதே பகுதியில் அந்த மொழி பேசும் பகுதியிலேயே இருக்கிறது. குன்று என்பது 73 அடி உயரத்தில் இருக்கும். அதிலும் குறிப்பாக வரை என்ற சொல் தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் தொடுவரை, அந்த விளிம்பு. வரை என்ற சொல்லுக்கு அடிமுதல் _ நுனிவரை என்று கூறுவோம். வரை என்பதை மலையின் விளிம்பிற்கும் பயன்படுத்துவோம். எல்லைக்கும் பயன்படுத்துவோம். அடிமுதல் நுனி வரை. இரண்டு எல்லைகளுக்கும் விளிம்பாக இருக்கும் சிந்து வெளிப்பகுதியில் மிக உயர்ந்த மலையினுடைய உச்சிப் பகுதிக்கும் இருக்கிறது. அதேபோல கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய கடல் மட்டத்தில் இருந்து 10 அடி உயரத்தில் மட்டுமே இருக்கக்கூடிய கடலை ஒட்டி இருக்கிற விளிம்பாக இருக்கக்கூடிய பகுதிக்கும் பெயராக இருக்கிறது. இந்தப் பகுதியில் குன்று, கோடு, மோடு, குற்று என்ற பெயர்கள் இருப்பதை மிகு ஆதாரங்களோடு நிறுவி இதற்காக இந்தக் கட்டுரையில் நாங்கள் சேர்த்திருக்கிறோம். ஆராய்ச்சியின் அடுத்த கட்டம் என்ன? இந்தப் புலப்பெயர்களையும், இந்தப் பேரி-னுடைய புலப்பெயர்களையும் மனிதர்களோடு தொடர்புபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றால், பெயர்கள் தானாக நகர்ந்து வராது. அதைவிட முக்கியம் மனிதர்களுடைய வரலாறு. வரலாற்றில் பெயர்கள் முக்கியத்துவம் இருப்பதனால் அந்தப் பெயர் அடையாளங்களை அவர்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
– (தொடரும்)
தொகுப்பு: அ.பிரபாகரன்