- தரை, நீர் மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கு வழிகாட்டும் நேவிகேஷன் செயற்கைக்கோளினை பி.எஸ்.எல்.வி.சி.22 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் ஜூலை 1 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
- ஒரே கேபிள் வயரில் நேர், எதிர் என இருவகை மின்சாரத்தினையும் கடத்தும் புதிய வயரை விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக பொறியியல் மாணவி ராக்கி ஷெனாய் கண்டுபிடித்துள்ளார்.
- ஆஸ்திரேலியா நாட்டின் புதிய பிரதமராக கெவின் ரூட் பொறுப்பேற்றுள்ளார்.
- உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஜூலை 3 அன்று ஒப்புதல் அளித்தது.
- கம்ப்யூட்டர் மவுசைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி டக்லஸ் எங்கெல் பர்ட் (88) 4-.7.2013 அன்று மரணமடைந்தார்.
சாலை விபத்துகள்
தமிழ்நாட்டில் தினமும் 43 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற 64,996 சாலை விபத்துகளில் 15,409 பேர்களும், 2011ஆம் ஆண்டில் 65,873 விபத்துகளில் 15,422 பேர்களும், 2012ஆம் ஆண்டில் 67,757 விபத்துகளில் 76,175 பேர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
2012ஆம் ஆண்டில் ஏற்பட்ட 91 சதவிகித விபத்துக்கு ஓட்டுநர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்று நீதிமன்றமும் கூறியுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை, 26,700 வழக்குகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.