642 கோடி

ஜூலை 16-31 2013

பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்திற்கான செலவு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டது. அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை 67 நாடுகளுக்கு அரசு சார்பில் பயணம் செய்துள்ளார். இதல் 63 பயணங்களுக்கு 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், மெக்சிகோ மற்றும் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதே அதிக தொகையாக உள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தனது அய்ந்தாண்டுப் பதவிக் காலத்தில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்திற்காக 223 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த அய்ந்தாண்டுகளில், மறைந்த தேசியத் தலைவர்களின் பிறந்த நாள் இறந்த நாள் விளம்பரங்களுக்காக 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் விளம்பரப் பிரிவு இயக்குநரகம் வெளியிட்டுள்ள விவரக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *