Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்புக் கூறியுள்ளது. கடந்த 32 ஆண்டுகளாகப் பரவி வரும் இந்த ஆட்கொல்லி நோய்க்கு 1 கோடிப் பேர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள-தாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்-துள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டில் 65 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர் அல்லது பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதாகவும் அய்.நா. சபை அறிவித்துள்ளது.