துளிச் செய்திகள்

ஜூலை 01-15
  • செல்பேசி குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • அமெரிக்க – ஹவாய் தீவு வி.எம்.கெக் ஆய்வுக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள டெலஸ்கோப் கண்டுபிடித்த நட்சத்திர மண்டலத்திற்கு சேகு-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர் தரும் ஆதாரமே போதுமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • நர்சரிப் பள்ளிக-ளுக்கு அங்கீகாரம் கட்டாயம் தேவை என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. றீ    பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது ஜாதி, மதம் குறிப்பிடத் தேவையில்லை என்று கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


 

இந்தியாவில் முதியவர்கள்

இந்தியாவில் வசிக்கும் 23 சதவிகித முதியவர்கள் துன்புறுத்தலை அனுபவித்து வருகின்றனர். 39 சதவிகித துன்புறுத்தல்கள் மருமகள்கள் மூலமாகவும் 38 சதவிகித துன்புறுத்தல்கள் மகன்கள் மூலமாகவும் ஏற்படுகின்றன.

தேசிய அளவில் முதியோரைத் துன்புறுத்துவதில் 63 சதவிகிதத்துடன் மதுரை முதல் இடத்திலும் உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் 60 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் தற்போது 10 கோடி முதியவர்கள் உள்ளனர். 2050ஆம் ஆண்டில் இது 31 கோடியாக உயர வாய்ப்புள்ளது.


பொன்மொழி

தகுதிக்கு அதிகமாகச் செலவு செய்பவர்கள் தங்கள் கழுத்துக்குத் தாங்களே சுருக்கிட்டுக் கொள்கிறார்கள்.
-_செர்பியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *