இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.
– கலைஞர், தி.மு.க. தலைவர்
ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.
மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.
–கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா
உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.
– சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்