மாயன்களின் கணிப்பு எதுவரை

மே 01-15

கி.மு. 2000 முதல் கி.பி. 250 வரை வாழ்ந்தவர்கள் மாயன் இனத்தவர் எனப்படுகின்றனர். இவர்கள் பலவகையான காலண்டர்களை உருவாக்கியுள்ளனர். அதாவது, வருடத்திற்கு 240 நாள்கள், 300 நாள்கள், 360 நாள்கள் என அவற்றில் ஒன்று மாதத்திற்கு 20 நாள்கள் மட்டும் உள்ளது.

20 நாள்கள்        – 1 உய்னூல் (மாதம்)

மாதங்கள்–>18 உய்னூல்    – 1 துன் (1 -ஆண்டு 360 (20×18=360) நாள்கள் கொண்டது)

20 துன்        – 1 காதுன்
20 காதுன்    – 1 பக்துன் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

இப்போது நடப்பது 13ஆவது பக்துன் என்றும் அது 21.12.2012இல் நிறைவடையும் என்றுதான் சொல்லியுள்ளார்களே தவிர, உலகம் அழியும் என்றோ, பாதிக்கும் என்றோ சொல்லவே இல்லை.

வாழும் பூமி சூரியனைச் சுற்றும் பெயர்ச்சியின் காரணமாக சூரியனை 6 மாதங்கள் ஒருபுறமும் (நீள்வட்டப்பாதை) அதாவது, இந்த 6 மாதங்கள் சூரியன் தெற்கு நோக்கிச் செல்வதைப் போல் தோன்றும். இது காட்சிப் பிழை அல்லது பூமிப்பெயர்ச்சியின் இடமாறு தோற்றப்பிழை. உண்மையில் பூமி தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றதே உண்மை.

டிசம்பர் 21இல் நீள்வட்டப் பாதையில் 6 மாதப் பெயர்ச்சியை முடித்து சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால், நமக்குச் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதைப்போல் தெரியும். சங்க இலக்கியங்களில் வடசெலவு, தென் செலவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருவெடிப்பு நிகழ்ந்து 1370 கோடி ஆண்டுகள் ஆகிறது.

நமது சூரியன் உருவாகி 500 கோடி ஆண்டுகள் ஆகிறது.

நாம் வாழும் பூமி உருவாகி 460- கோடி ஆண்டுகள் ஆகிறது.

ஒரு செல் உயிரி அமீபா உருவாகி 200 கோடி ஆண்டுகள் ஆகிறது.

ஆக்ஸிஜன் தோன்றிய ஆண்டு

குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய ஆண்டு

விண்வெளிக்கு மனிதன் சென்ற ஆண்டு (அதற்குமுன் விலங்குகளை அனுப்பிய ஆண்டு)

தொலைநோக்கி உருவாக்கிய ஆண்டு

செயற்கைக்கோள் உருவாக்கிய ஆண்டு

வானூர்தி உருவாக்கிய ஆண்டு

ஆடைகள் உருவாக்கிய ஆண்டு

பட்டு, கப்பல் உருவாக்கிய ஆண்டு

கேமரா உருவாக்கிய ஆண்டு

கண்டிப்பாக உலக உருண்டை எத்தனை முடியுமோ அத்தனை கையில் உயர்த்திக் காட்டுவோம். மாயன்களும் டிசம்பர் 21ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வடக்கில் திரும்புவதையும், ஜூன் 21ஆம் தேதி தெற்கில் திரும்புவதையும் உற்று நோக்கியுள்ளனர்.

ஆனால், பூமிப்பெயர்ச்சியால்தான் இந்த நிகழ்வு என்பதை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்போல் தெரிகிறது. இப்போதும் பூமியில் பல நாடுகளில் பலர் அறிந்திருக்கவில்லை.

கோபர் நிகஸ் தத்துவம் இதனை விளக்கும். என்னவோ உலகில் எல்லோரும் 2012 இப்போதுதான் வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவீரர் தோன்றி 2600 ஆண்டுகள் ஆகிறது. புத்தர் தோன்றி 25-00 ஆண்டுகள் ஆகிறது. திருவள்ளுவர் தோன்றி 2043 ஆண்டுகள் ஆகிறது.

இப்போது நடைமுறையில் 2012 என்பது இயேசு கிறித்துவிற்குப் பிறகான கி.பி. 2012. ஆனால், வரலாற்றில் ஏற்கெனவே 2012 முடிந்துவிட்டது (கி.மு.விலும்). ஓர் அணுவிலிருந்து பிரபஞ்சம் தோன்றி 1370 கோடி ஆண்டுகள் ஆகிறது. நமது சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகிறது.  (சூரியனின் ஆயுள் 1000 கோடி ஆண்டுகள் என 20 ஆண்டுகள் ஆய்வு செய்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.)

நாம் வாழும் பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. (சென்ற ஆண்டு ஓசூரில் வந்து விழுந்த விண்கல்லை ஆய்வு செய்து 460 கோடி வயதுடைய கல் என்று அறிவித்தார்கள்.) சூரியக்குடும்பத்திற்கு வெளியில் இருந்து எந்தப் பாதிப்பு வந்தாலும் கண்டறிந்து கொள்ள வல்லமையுடன் மனிதன் பல செயற்கைக்கோள்களை சூரியக்குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அனுப்பி வாகை சூடி கண்காணித்து வருகிறான்.

பொதுவாக கோள்களின் இயக்கத்தைப் பழிப்பதற்கு மனிதனுக்கு அருகதை இல்லை. போற்றுவதற்கே உரிமையுண்டு. மார்ச் 21, செப்டம்பர் 20 ஆகிய நாள்கள் இரவும் பகலும் சமமான நாள்கள் ஆகும். ஜூன் 21, டிசம்பர் 21 ஆகிய நாள்கள் நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனைச் சுற்றித் திரும்பும் நாள்கள். இது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கைதான்.

சனிப்பெயர்ச்சியையும், குருப்பெயர்ச்சியையும் விட்டுவிட்டு பூமி சுழற்சியையும், பூமிப்பெயர்ச்சி-யையும் புரிந்து கொண்டால் புரட்சிக்கவிஞரின் அறிவை விரிவு செய்/ அகண்டமாக்கு/ விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை/ மானுட சமுத்திரம் நானென்று கூவு
என்று கூவலாம். பாரதியாரும்,

விரியும் அறிவுநிலை காட்டுவீர் – அங்கு

வீழும் சிறுமைகளை ஓட்டுவீர் என்கிறார்.

வள்ளுவரோ, அய்யத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நனிய துடைத்து. – என்றும்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லார் அறிவிலா தார் என்கிறார்.

பாரதியின் ஆத்திச்சூடியில்,

ஜோதிடம் தனை இகழ்

வானநூல் பயிற்சி கொள்

அறியாமையைக் கொல் என்கிறார்.

வானநூல் பயிற்சி கொள்வோம், மூடநம்பிக்கைப் புராணங்களை, வேதங்களை வெல்வோம். உலகம் அழியவே அழியாது.

– செந்தமிழ் சேகுவேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *