உலகில் உள்ள ஏழை மக்களில் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியினர் உள்ளனர் என்று வாஷிங்டனில் வெளியிடப்பட்ட உலக வங்கி-யின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலரில் 1.25க்குக் கீழ், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 65 ரூபாய்க்குக் கீழ் வாழ்க்கையை நடத்துபவர்கள் ஏழைகள் என்று நிர்ணயித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்-பட்டது. இதன்படி, 120 கோடி ஏழை மக்கள் உலகின் பல நாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
1981ஆம் ஆண்டு 22 சதவிகிதமாக இருந்த இந்திய ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சப் – சஹரன் ஆப்ரிக்காவிலும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகின் மொத்த ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்ற நிலையில் உள்ளதைப் போலவே சப் -_ சஹரன் ஆப்ரிக்காவிலும் ஏழைகளின் எண்ணிக்கை உள்ளது.
சீனாவில் 1981ஆம் ஆண்டு 43 சதவிகிதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 13 சதவிகிதமாக குறைந்துள்ளது.
துளிச் செய்திகள்
- திருமணமான பெண் வாரிசுக்குக் கருணை அடிப்படையிலான அரசுப் பணி நியமனத்தை மறுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
- வடகொரியா நாட்டின் புதிய பிரதமராக ஏப்ரல் 1 அன்று பாக்பாங்-ஜூ பொறுப்பேற்றுள்ளார்.
- பிரிட்டனின் மேனாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஏப்ரல் 8 அன்று மாரடைப்பால் காலமானார்.
- வெனிசூலா நாட்டின் குடியரசுத் தலைவராக நிகோலஸ் மடுரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தினத்தந்தி நாளிதழின் அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் ஏப்ரல் 19 அன்று காலமானார்.