Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியாவின் எல்லாத் திட்டங்களையும்விட தண்ணீரும் மின்சாரமும் இன்றியமையாத திட்டங்களாக இருக்க வேண்டும். இமயமலைக்குக் கொடுக்கிற முக்கியத்து-வத்தை மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தர தவறிவிட்டோம்.

கவிஞர் வைரமுத்து, திரைப்படப் பாடலாசிரியர்


இந்தியாவில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களில் 7 சதவிகிதம் பேர்தான் உயர்கல்வி பெறுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை ஜெர்மனியில் 21 சதவிகிதமாகவும் அமெரிக்காவில் 37 சதவிகிதமாகவும் உள்ளது.

பிரணாப் முகர்ஜி,
குடியரசுத் தலைவர்


தற்போது 5 பேரில் ஒருவர் பசியுடன் இருக்கிறார். அவர்களில் 75 சதவிகிதம் பேர் கிராமத்துவாசிகள். வறுமையின் உச்சகட்டம் தற்கொலை. ஆனால், நம் யாருக்கும் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை கிடையாது. அது இந்த நாட்டின் சட்டம், தர்மம், நியாயம்.

விமலா,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்