Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குழந்தை நடனத்திற்குத் தடை

அரியானா மாநிலத்தில் உள்ள கினானா என்ற கிராமப் பஞ்சாயத்துக் கூட்டத்தில், பெண் குழந்தைகளை நடனமாட வைப்பது அவர்களின் வாழ்க்கையைத் தவறான பாதைக்குத் திசை திருப்பிவிடும். இது போன்ற நடன நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட காரணமாக உள்ளது.

எனவே, பள்ளி விழாக்களில் மாணவிகள் நடனமாடக் கூடாது என தடை விதித்துள்ளதாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது அந்த ஊரின் பஞ்சாயத்து அமைப்பு.