பெண்ணாகப் பிறந்தால் இத்தாலியில் பிறந்து வேலைக்குச் செல்ல வேண்டும். இத்தாலிய நாட்டுச் சட்டப்படி, பெண்ணின் கர்ப்ப காலத்தின் கடைசி 2 மாதம் முதல் குழந்தை பிறந்தபின் 3 மாதம் வரை 5 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. 80 சதவிகித சம்பளத் தொகையை மாநில அரசே கட்டிவிடுகிறது.
மேலும், குழந்தை 3 மாதமாகும்போது வேலைக்குச் செல்லும் அதன் தாயும் தந்தையும் விரும்பினால், 6 மாதங்கள் வரை 30 சதவிகித சம்பளத்துடன் விடுமுறையில் செல்லலாம்.
தாயான பெண் ஓர் ஆண்டு முழுவதும் விடுமுறையில் இருக்கும் வசதியை அந்த அரசாங்கமே செய்து தருகிறது. கடினமான பிரசவமாக இருக்கலாம் என மருத்துவர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் 9 மாத விடுப்பை இத்தாலிய சட்டம் வழங்குகிறது.