தமிழ் – தமிழன் பிளவுபட்டது எப்போது?
– எஸ்.ராமகிருஷ்ணன்
இவ்வளவு பெரிய பவுத்த மரபு, பவுத்த மதம் வந்தபோது, தமிழுக்குள்_தமிழ் நிலப்பரப்புக்குள் பெரிய மாற்றம் நடந்ததில்லை. இவர்களோடுதான் இணைந்து வந்தது சமண மதம். இன்னும் சொல்லப்போனால் சமணமும், பவுத்தமும் இரட்டை மதங்கள் போலத்தான் வந்தது.
இந்த இரட்டை மதங்களைப்போல வந்த சமணம் என்பது பவுத்தத்தை ஒரு வாதுக்கு அழைத்து, பவுத்தர்கள் விட்டுச்சென்ற பணியை, பவுத்தர்கள் செய்யமுடியாத வணிகத்தோடு உள்ள தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சமணம் ஆரம்பிக்கிறது. சமணம் தழைத்தோங்கும்போது பெரிய அளவிற்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை மாற்றவில்லை.
காரணம், அது அவர்கள் வாழ்க்கையோடு ஒன்று கலக்கவில்லை. வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழக் கூடியவர்களாக சமணத் துறவிகள் இருந்தனர். மதுரை மாவட்டத்திற்குச் சென்றால் மதுரையைச் சுற்றி 8 குன்றுகள் இருக்கின்றன. 8 குன்றுகள் மீதும் சமணப் படுகைகள் என்று சொல்லக்கூடிய குகைகள் இருக்கின்றன. குகைக்குள் சென்றால் அங்கு அந்தக் காலத்தில் நடைபெற்ற பள்ளிகள். அதாவது, இன்றைக்கு இருக்கக்கூடிய பள்ளிகள் போல. அன்றைக்கு ஆசிரியரிடம் மாணவன் கற்றுக் கொள்வதற்கான குகைகள், வழித்தடங்கள் இன்றைக்கும் இருக்கிறது. அங்கே என்ன செய்கிறார்கள் என்றால், ஓர் ஆசிரியர் தங்குவதற்கான அறை, பூமியிலிருந்து போனீர்களேயானால் ஒரு மணி நேரமாகும். உயரத்திலிருக்கிறது மலை. ஏறி மேலே போனீர்களேயானால் அங்கே ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் போனால் ஒரு பக்கம் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக 15 அறைகள், படுகைகள், ஒரு ஆள் நீளத்திற்கு கல்லிலியே அடிச்சிருக்காங்க. கல் மட்டும் கொஞ்சம் வளைவாக அடித்திருப்பார்கள். படுகைன்னு சொல்வாங்க. அப்படி படுகைன்னு 15, 20 படுகைகள் இருக்கு.
பக்கத்தில் குகையினுடைய ஒரு பகுதி தடுக்கப்பட்டு, இன்னொரு பகுதியாக இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குன்னா, அதுக்குள்ள ஒரு மேடு. அந்த மேட்டினுள் ஓர் படுகை, இந்த இடத்தில் அருகிலுள்ள ஓர் நீர் ஊற்று இருக்கும். மாணவர்களாகியவர்கள் அந்தக் காலத்திலேயே குகைக்குப் போய் ஆசிரியர்களோடு தங்கி, அங்கேயே கல்விகற்று, மலையிலேயே வசித்து பல ஆண்டுகாலம் கற்றுத் தேர்ந்து ஞானமுடையவர்களான பின் மக்களுக்குச் சேவை செய்கின்றனர். கல்வி என்பது சுயநலத்திற்குப் பயன்படுவது அல்ல. கல்வி என்பது சேவைக்குப் பயன்படக்கூடிய ஒன்று. மருத்துவமும், கல்வியும் அவர்கள் சேவையாகத்தான் செய்தார்கள். பவுத்தர்கள்தான் முதன்முதலில் குகைத்தளங்களை அமைத்தார்கள். பள்ளி எனச் சொல்லப்படக் கூடிய (ணிபீநீணீவீஷீஸீ.) கல்வி முறையையே பவுத்தம்தான் அறிமுகப்படுத்தியது. ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கு ஓர் ஆசிரியர். ஒரு மணிநேரம் ஒரு பாடம் நடத்தப்பட வேண்டும். இந்தப் பாடத்தை ஆசிரியர் நடத்திவிட்டு, அதிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு மாணவர்கள் விடை சொல்ல வேண்டும்.
இந்த விடையை மாணவர்கள் சொல்வது சரிதானா என்று மதிப்பிட்டு, மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இப்படி ஒரு மாணவன் 12 ஆண்டுகாலம் கல்வி கற்க வேண்டும் என்ற முறையெல்லாம் வெள்ளைக்காரன் உருவாக்கியதல்ல, பவுத்தர்கள் உருவாக்கியது. நாலந்தா பல்கலைக்கழகத்தில்தான், முதன்முதலில் பாடப்பிரிவுகள் அமைக்கப்பட்டு பாடம் தனியாக துவங்கப்பட்டு, ஆசிரியர்கள் அங்கே வரவழைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து நாலந்தாவில் போய் கற்றிருக்கிறார்கள். அப்படிக் கல்விக்காக இடம் பெயருவது அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது. இந்த பவுத்த மதத்தில் பள்ளி என்ற சொல் கல்வி நிலையத்தைக் குறித்ததினால்தான் இன்றைக்குக்கூட பல சொற்களில், பள்ளின்னு சொல்லக்கூடிய சொல் இருக்கு. அந்தச் சொல்லை எல்லாம் நான் சில நேரம் யோசிப்பேன். இப்போ சமையல் அறையைக் கோவில்களிலெல்லாம் என்ன சொல்வாங்க. அதில் ஏன் பள்ளி சேர்ந்துச்சு! சரி, அத விட்ருங்க, இன்னொன்று, நாம படுக்கையறையை என்ன சொல்றோம்! பள்ளியறைன்னு சொல்றோம். அங்க ஏன் பள்ளி சேர்ந்திச்சு, காரணம், இதை பவுத்த மதத்துக்குள் சமைக்குறதும் மலைமேலதான், உறங்குவதும் மலை மேலதான், கல்வி கற்குறதும் மலைமேலதான், பள்ளி என்கிற சொல் எங்கிருந்து வருகிறதோ, அதெல்லாம் கல்வி நிலையத்தின் ஓர் உட்பிரிவுகள், அன்றைக்கு மலைமேலேயே தங்கிட்டுப் படிச்சிருக்காங்க.
அவங்க படிச்ச இடம் படுகை, பக்கத்திலிருந்த சமைத்த அறை மடப்பள்ளி. ஆசிரியர் தூங்கிய அறை, பள்ளியறை, அந்தப் பள்ளியறை எனும் சொல் பவுத்தத்திலிருந்து மாறி வந்திருக்கிறது. இன்றைக்குக்கூட எண்பெருங் குன்றங்களைக் கூட பார்க்கலாம். மதுரைக்குப் பக்கத்தில் அரிட்டாபட்டி என்ற கிராமம் இருக்கிறது. நீங்கள் எப்போதாவது போனால், அரிட்டாபட்டிக்குப் போய்ப் பாருங்கள். அந்த அரிட்டாபட்டிங்கிறது பவுத்த குகைத்தளம். இந்த பவுத்தக் குகைத்தளமான அரிட்டாபட்டியில் அரிட்டர் என்ற பவுத்த ஞானி, இவரை _ – பவுத்தத்தைப் பற்றி இலங்கையில் எழுதப்பட்டிருக்கிறது. புத்த நூல்களிலெல்லாம் இவரைப்பற்றிய குறிப்புகள் வருது. மிக முக்கியமான சிந்தனையாளர், தமிழகத்தைச் சேர்ந்தவர் அரிட்டர்.
இந்த அரிட்டர், நடத்திய பள்ளி அரிட்டாப்பட்டி. இந்த அரிட்டாபட்டியில் குகைத்தளம் இருக்கிறது. இந்த பவுத்தம் மேலோங்கிய காலகட்டத்தில் மதுரையைச் சுற்றி, பவுத்தர்கள் தங்கி, பாடம் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் போன பின் சமணர்கள் வந்து, அந்தக் கல்வி நிலையத்தை அப்படியே நடத்தியிருக்கிறார்கள். இது எப்படின்னா, ஒரு கல்வி நிலையம் நடத்தப்படுகிறது. இந்தக் கல்வி நிலையத்தைப் பவுத்தர்கள் நடத்தினார்கள் இல்லையா, அவர்கள் காலம் முடிந்தவுடன் அதே இடம் அதேபோல, அப்படி சமணர்களால் கைக்கொள்ளப்பட்டது. அதனால்தான் கீழே குபில்குடி மாதிரியான, மதுரை மாதிரியான, சுற்றியுள்ள அதே பகுதியில், சமணப் பள்ளிகள் கீழே அப்படியே இருக்கு. நிறைய பவுத்தமும், சமணமும் தமிழகத்திற்கு வந்தபோது தமிழகத்தில் பெரிய அளவுக்குத் தமிழர் வாழ்க்கையை மாற்றவில்லை. மாறாக, தமிழரின் வாழ்க்கையை மேம்படுத்தியது. ஒன்று கல்வியில், இன்னொன்று புதிய சிந்தனையில். தமிழ் மரபினுடைய அடுத்த நிலைகளில் கொண்டு செல்வதற்கான வழிகளை அது காட்டுகிறது. பெண் விடுதலையாக இருக்கலாம். அல்லது, தமிழ்மக்கள் எதையெல்லாம் ஜாதிய ஒடுக்குமுறைகளாகக் கைக்கொண்டார்களோ, அந்த ஒடுக்கு முறைகளையெல்லாம் வேண்டாம் என்று மறுப்புத் தெரிவித்தவர்களாக இருக்கலாம். இதில் எல்லா வகையிலும் பவுத்தமும், சமணமும் முன் வகிக்கிறது. அப்போதுதான் முதன்முதலாக உணவில் ஒரு பிரச்சினை வருகிறது. அதுவரைக்கும் எல்லா உணவுகளையும் எல்லோரும் சாப்பிட்டார்கள். சூழலுக்கு ஏற்ப, அவர்களின் வாழ்விடத்திற்கு ஏற்ப, கிடைக்கக்கூடிய உணவுகளின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டனர். தமிழர்களின் தமிழ் இனத்தில், எந்த இனம் தமிழகத்தினுடைய புராதன தமிழர்களாக இருந்திருப்பார்கள். அப்பாதுரையார் சொல்கிறார்: இரண்டு பேர்களைச் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள், வேடர்கள், மீனவர்கள். இவர்கள் இருவரும்தான் தமிழகத்தினுடைய பூர்வீககுடிகளாக இருந்திருப்பார்கள். ஏனென்றால், எல்லாப் பகுதிகளிலும் தமிழில் பேசுகின்றனர். வேடர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
பல்வேறு நிலப்பரப்புகளில், மீனவர்கள் இருந்திருப்பார்கள். இப்படி மீனவர்கள், வேடர்களிடம், என்ன உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்கிறது. மீனவர்கள் மற்றும் வேடர்களின் உணவுப் பழக்கங்களை எடுத்துப் பார்த்தால், இத்தனை ஆயிரம் ஆண்டு மாற்றங்களில், பெரிய மாற்றங்கள் ஒன்றும் வரவேயில்லை. ஒன்றிரண்டு உணவுகளினுடைய சுவை கூடியிருக்கு, குறைஞ்சிருக்கே தவிர இன்றைக்கும்கூட மீனவர்கள், இந்தியா முழுமைக்கும் உள்ள மீனவர்களின் உணவுப் பண்பாடு, வேடர்கள் என்று சொல்லப்படக்கூடிய மலைவாழ் மக்களின் உணவுப் பண்பாடு பெரிதாக மாற்றம் அடையவே இல்லை. அப்போ மீனவர்களின் உணவுப் பண்பாட்டைக் கொண்டு தமிழர்களின் பண்பாட்டைக் கொண்டு, பழைய உணவுப் பண்பாடு எப்படி இருக்கும் என்று பார்த்தால், இந்த உணவுப் பண்பாடு எப்படிப் பிரிக்கப்பட்டிருக்கிறதென்றால், காலமாற்றத்திற்கு ஏற்ற சீசன்னு சொல்றாங்க இல்லையா, பருவகால மாற்றத்திற்கு ஏற்ப உடலினுடைய சூடு அல்லது குளிர்ச்சி, அல்லது பித்தம். இதற்கு ஏற்ப உணவை மாற்றியிருக்கிறார்கள். இன்னும் கூட, நம் காலகட்டத்தின் உணவுகளை, பழங்களை, காய்கறிகளை, அவர்களுக்கு உகந்த இறைச்சியைத்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். றிக்ஷீமீ க்ஷிமீரீமீணீக்ஷீவீணீஸீ என்று சொல்லக்கூடிய தூய சைவ சாதம் இருக்கிறதில்லையா? அது தமிழர்களிடம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு பிரிவினையை உண்டாக்குவது. ஜாதியத்தை முதன்மைப்படுத்துவதாக இருக்கும், சைவம் சாப்பிடுறவனெல்லாம் உயர்ந்தவன். அசைவம் சாப்பிடுறவனெல்லாம் தாழ்ந்தவன் என்கிறான். அசைவமோ, சைவமோ, அந்த உணவை யார் கைக்கொள்கிறார்கள். அவர்கள் எந்தச் சூழலில் கைக்கொள்கிறார்கள். இந்த உணவு வருகையின் போது மறுப்பதற்கில்லை. இந்த வரலாற்றைத் தமிழகத்தினுடைய வரலாற்றில் எடுத்துப் பார்த்தீர்களேயானல் இந்தப் பவுத்தர்கள் வந்தபோதும் சரி, சமணர்கள் வந்தபோதும் சரி, அதுவரைக்கும் சமணர்களின் சைவவாதம், சைவ உணவுதான் சிறந்ததுங்கிற அந்த எழுச்சி உருவானது. இது மக்களிடம் தோற்றுப்போய்விடுகிறது. நண்பர்களே! அவர்களால் தமிழ் போன்ற மொழிகளிலே சமணம் வேரூன்றி, சமண ஆலயங்களெல்லாம் உருவானபோதும்கூட உணவு முறைகளில், சடங்குகளில், பழக்க வழக்கங்களில் அவர்களால் தமிழர்களை மாற்ற முடியலை. மாறாக, சமணத்தைத் தழுவிய மக்களை மட்டும்தான், அவர்கள் கைக்கொண்டார்கள். குறிப்பிட்ட பகுதிதான், இந்தச் சமணமும் பவுத்தமும், மேலோங்கி இருந்த காலத்தில் இருந்தது.
இதனுடைய அடுத்த வீழ்ச்சியாக, இரண்டையும் புறந்தள்ளி வரக்கூடிய மதமாக வைதீகமதம் என்று சொல்லக்கூடிய பிராமணம் தமிழ்நாட்டைப் பற்றிக் கொள்ளும்போதுதான் நம்மிடம் வந்த அத்தனை உட்பூசல்களுமே ஆரம்பிக்கிறது. இதுதான் முதன்முதலாக வரலாற்று ரீதியாக தமிழனைப் பிளவுபடுத்தியது. தமிழனை ஜாதி வேறாகத் துண்டாக்கியது. தமிழனை, அசைவம் சைவம் என வேறுபடுத்தியது. இன்னும் சொல்லப்போனால் வைதீக மதத்தினுடைய வருகைக்குப் பின்னால்தான், ஒரு தூய்மைவாதம், யார் உயர்ந்தவர், இவர் உயர்ந்தவர், இவர் உயர்நிலையைச் சார்ந்தவர். இவருக்கு அனுமதி உண்டு. இவருக்கு அனுமதி இல்லை. இவர் கோவிலை வெளியிலிருந்து கும்பிடணும், இவர் கோவிலுக்குள் உள்ளிருந்து கும்பிடணும், இவர் இந்த தெய்வத்தை வணங்குகிறார் என்பதாக பேதங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. சமயச் சண்டைகள், உட்பூசல்கள் வர ஆரம்பித்தது நன்றாகத் தெரிகிறது. தமிழகத்தில் அங்கிருந்துதான் தமிழனுடைய பண்பாட்டு வீழ்ச்சி தொடங்குகிறது. இந்தப் பண்பாட்டு வீழ்ச்சியினுடைய உச்சகட்டத்தில் நாம் நிற்கிறோம். முதலடி விழுந்தது. வைதீக மதத்தினுடைய ஆளுமைகள், தமிழகம் வரத் தொடங்கியதும் வைதீக மதத்தை ஏந்தத் தொடங்கியதும், ஏற்றுக் கொண்ட மன்னர்களும் சரி, மக்களும் சரி, அதற்கான ஓர் இடத்தை உருவாக்கினர். ஆனால், வைதீக மதம் என்று சொல்லக்கூடிய பிராமண மதம் வடக்கிலிருந்துதானே வருகிறது. இவர்களுக்கென்ற அடையாளங்கள் இல்லாதபோது இவர்கள் எந்த அடையாளங்களைத் தன்னுடைய அடையாளங்களாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அன்றைக்கிருந்த தமிழ் மக்களுடைய இதே அடையாளங்களைத்தான் அவர்கள் தங்களுடைய அடையாளங்களாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சிவனை, திருமாலை, சிறுதெய்வங்களை, எல்லாவற்றையும் அவர்கள் கைக்கொண்டு ஆனால், அவை எல்லாவற்றையும் ஒருமித்த மதமாக மாற்றிக் கொண்டு, இந்த ஒருமித்த மதத்தை வைத்துக்கொண்டு, பவுத்த மதத்தையும் அழிக்கணும், நமக்குப் பொது எதிரி ஒருவன். அந்தப் பொது எதிரி சமணமும், பவுத்தமும். அவரை அழிப்பதென்றால், நமக்கு இன்றைக்கு இருக்கக்கூடிய வைதீக மதம் எழுச்சி பெறணும்னு எழுச்சி பெறுகிறது.
அதிலிருந்துதான், நான் படித்தவரைக்கும், வரலாற்றினுடைய போக்கு திசைமாறுகிறது, நாம் மதத்தினுடைய இந்த அடையாளங்களையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முடைய எல்லா அடையாளங்களுக்குப் பிறகு, அரசியல் ஒன்று இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது, இந்த அரசியல் ஒவ்வொரு காலகட்டத்தில் யாரால் முன்னெடுக்கப்படுகிறது. ஒருவேளை தமிழ் அடையாளங்களை முழுமையாகப் பிரிக்க விரும்பினால், தமிழ் பவுத்தம், தமிழ் மொழியை, சமணத்தினுடைய தோற்றம் வளர்ச்சி, அதனில் நடந்த மாற்றங்களையெல்லாம் முழுமையாக ஆய்வு செய்யப்படணும். ஏனென்றால், திரும்பத் திரும்ப தமிழ்க் காப்பியங்களில் சொல்லப்படக்கூடிய புத்தகங்களைப் பெருமைக்குரிய புத்தகங்களாகப் படிக்கும்போது அதிலிருந்து என்ன நீக்கம் செய்துவிடுகிறார்கள் என்றால், சமணத்தை, பவுத்தத்தை, நீக்கம் செய்துதான் படிக்கிறோம்.
அந்தக் காப்பியங்கள் அதனுடைய நீதியை வலியுறுத்துகின்றன என்ற போதும், அந்த நீதியை ஏன் தவறவிடுகிறோம். இன்றைக்கு என்னைப் போன்றவர்களெல்லாம் இதைத் தேடிப் படிப்பவர்களோடு அந்த நிலவியலையும் பார்க்க விரும்புகிறோம். நான் கொற்கைக்-குப் 4-, 5 முறை போயிருக்கேன். கொற்கைக்கு முதன்முதல் போ-கும்போது, எனக்கு இருந்த மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால், கொற்கை என்றாலே நம் மனதில் என்ன இருக்கிறது. முத்துக் குளிப்பது கொற்கைத் துறைமுகமா என்று. ஆனால் இன்றைக்கு இருப்பது, இருக்கக்கூடிய கொற்கையில் கடல் கிடையாது.
கொற்கையில் கடல் இல்லையென்கிற செய்தி எனக்குக் கிடைக்கிறது. கொற்கையில் நான் இறங்கியபோது, அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு காலம் கொற்கையைப் பாடப்புத்தகத்தில் படித்து, பாடப்புத்தகத்தில் நம்பிக் கொண்டிருந்த கொற்கை என்பதும், நான் போய் இறங்கிய கொற்கை என்பதும் வேறு வேறு ஊர்களான்னு, அங்கே கொற்கைங்கிற பேரில் ஊர் இருக்கிறது.