சமூகவியலாளர் – நாத்திகர் எஸ்.சந்திரசேகர்

ஏப்ரல்-01-15

–  நீட்சே

சுப்பிரமணியன் சந்திரசேகர் ஓர் இந்திய – அமெரிக்க வானவியல் இயற்பியலாளர். 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்து 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி மறைந்தவர்.

பல வான் மீன்களின் வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய அண்மையிலான வளர்ச்சி முறை குறித்த கருத்தை அறிவதற்கான முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்ததற்காக நோபல் பரிசு பெற்றார். சந்திரசேகர், பஞ்சாபில் உள்ள லாகூரில், ஒரு தமிழ்நாட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்.

சீதாலட்சுமி – சுப்பிரமணியன் தம்பதிகளின் 10 குழந்தைகளில் இவர் மூன்றாவதாகப் பிறந்தவர். அவருடைய தந்தை வழி மாமாதான், இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமன் என்ற புகழ்பெற்ற அறிவியல் மேதை ஆவார். ஆரம்ப காலத்தில் சந்திரசேகர் வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். பிறகு சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். இயற்பியலில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.

1929இல் அவர் தனது முதல் ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இந்திய அரசாங்கத்தின் மாணவர்களுக்கான உதவித்தொகையுடன் அவர், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படித்தார்.

பேராசிரியர் ஆர்.எச். ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராக அவர் ஆழமான தனது படிப்பைத் தொடர்ந்தார். பேராசிரியர் பி.ஏ.எம். டிராக் என்பவரின் யோசனையின் பேரில், கோப்பன் ஹேகன் நகரில் உள்ள பாடமுறை இயற்பியல் கல்வி நிறுவனத்தில் தனது கடைசி ஆண்டுக் கல்வியை முடித்தார். அங்கே பேராசிரியர் நீய்ல்ஸ் போர் என்பவரைச் சந்தித்தார்.

1933ஆம் ஆண்டில் அவர் தனது நலமழிந்த வான்மீன்கள் என்ற புத்தகத்திற்காக வெண்கலப் பதக்கம்  பெற்றார். அத்துடன் தானே சுழலும், கீழ் இழுத்துச் செல்லும் ‘Poly Types’  பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில், அவருக்கு 1933இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தாரால் முனைவர் (Ph.D) பட்டம் கொடுக்கப்பட்டது. திரும்ப  1933-1937 காலகட்டத்தில் டிரினிட்டி கல்லூரியின் உதவித்தொகை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவருக்கு சர்.ஆர்தர் எடிங்டன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவர் வெளியிட்ட புகழ் பெற்ற கண்டுபிடிப்பு வெளிப்படையாகவே ஏளனம் செய்யப்பட்டது.

அது அவரை, பிரிட்டனுக்கு வெளியே வேலை தேட விரட்டிற்று. பிறகு பல இடங்களில், சந்திரசேகர், எடிங்டனின் நடத்தை, இன அடிப்படையில் அமைந்துள்ளதாகக் கூறினார். 1937இல் அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தினரால் பணிக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டார். அவர் அங்கேயே தொடர்ந்து பணியாற்றினார். இயற்பியலில் பல துறைகளிலும், வானவியல் இயற்பியலிலும் அவர் தனக்கேயுரித்தான நடைமுறையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார்.

நோபல் பரிசு

1983இல் சந்திர சேகருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. விண்மீன்களின் உயிர்த் தோற்றத்திற்கும், உட்கட்டுக் கோப்புக்கும் அதற்கு முக்கியக் காரணமான வெளிப்புற செயல் மாற்றங்கள் பற்றிய அவரது ஆய்விற்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

அவர் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார். ஆயினும் மனச்சோர்வு பெற்றார். காரணம், அவரது முந்தைய ஆராய்ச்சிதான் அந்தப் பாராட்டுப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தனது வாழ்நாள் சாதனை தாழ்வுபடுத்தப்பட்டதாக அவர் உணர்ந்தார். வில்லியம் ஏ. ஃபவுலர் என்பவருடன் அவர் இந்த நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

சந்திரசேகர் 1936இல் லலிதாவைத் திருமணம் செய்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது, அவரைவிட ஒரு வருடம் குறைந்த வகுப்பில் லலிதா படித்து வந்தார்.

நோபல் பரிசு பெறும்போது தனது சுய வரலாற்றில் எனது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக, லலிதாவின் பொறுமையான புரிந்துகொள்ளுதலும், ஆதரவும், உற்சாகமூட்டுதலும் எனக்கு உதவியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பு

சந்திரசேகரின் குறிப்பிடத்தக்க பணி, அவரது சந்திரசேகரின் எல்லை என்ற விண்ணியல் இயற்பியல் ஆய்வாகும். அந்த எல்லை, வெள்ளை, குள்ள நட்சத்திரத்தின் அதிகபட்ச அடர்துகள்கள் பற்றி விவரிக்கிறது. 1.44 சூரிய துகள்கள் அல்லது அதற்குச் சமமான குறைந்த அடர்துகள்கள், ஒரு நட்சத்திரத்தைவிட அதிகமாகி, கடைசியில் அழிந்துபோய், நியூட்ரான் நட்சத்திரமாகி அல்லது சூப்பர் கோவாவைப் போல நியூட்ரான் நட்சத்திரமாகவோ அல்லது கருப்பு ஓட்டையாகவோ மாறலாம்.

1995இல், திடீரென்று ஏற்பட்ட இதய அடைப்பு காரணமாக, சந்திரசேகர் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையில், மனைவியை விட்டு இறந்து போனார்.

பல நேரங்களில் சந்திரசேகர் வெளிப்படையாகவே தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக் கொண்டதல்லாமல், அதன்படியே, தனது தனி வாழ்விலும், பொது வாழ்விலும் நடந்து கொண்டுள்ளார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர்கள் சரித நினைவுரையில், சந்திரசேகர் ஒரு கணித செயல்பாட்டு வல்லுநர்; அவரது ஆராய்ச்சிகள் பெரும்பாலும் வானியலை மய்யப்படுத்தியே இருந்துள்ளன; அவரைப் போல மற்றொருவரைக் காண்பது இயலாது என்று ஆர்.ஜே. டெய்லர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

தழிழில் : ஆர்.ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *