பதில் சொல்லும் ஓய்…பாப்போம்
தமிழகத்தில் ஜாதியின் அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்
விசுவஹிந்து பரிஷத் ஆலோசகர் எஸ். வேதாந்தம்.
ஜாதி அடிப்படையை இந்து மதத்துல வச்சிருக்கிறது யாருங்கானும்?அரசியல் கட்சிகள் தோன்றி ஒரு நூறு நூத்தம்பது வருசம் இருக்குமா? ஆனா, ஜாதி ஆயிரமாயிரம் வருசமா இருக்கே! ஜாதிய `மனுங்கிற உங்களவா உண்டாக்கினாரு; அத நீங்க கெட்டியாப் பிடிச்சுண்டு இன்னும் எங்களப் பிரிச்சி வெச்சிருக்கேள்; இன்னும் கோவில்ல எங்களவா மணியாட்ட முடியல. அர்ச்சகர் படிப்புப் படிச்சிட்டுப் போராட்டம் பன்ணிண்டிருக்கா…உங்களவா கேஸ் போட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்கிற சட்டத்தைத் தடுத்து வெச்சிருக்கா. கிராமக் கோவில் பூசாரிகள் மாநாடு போடுறேளே… ஏன் பெரிய கோவில் அர்ச்சகர்கள் மாநாடு போடுறதில்ல? சொல்லும் ஓய்… கிராமத்துல இருக்கிறதெல்லாம் எங்களவா. அவளா பலி ஆடா ஆக்கிண்டு, பெரிய பெரிய கோவில்ல இருக்கிற உங்களவா நன்னா உருட்டி உருட்டி நெய்யும் பருப்புமா உள்ள தள்ளுறா. அந்த இடத்துக்குப் போட்டி வந்திடும்னுதானே அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்துக்குத் தடை வாங்கினேள்… பதில் சொல்லும் ஓய்… பாப்போம்.
திருப்பதி பாலாஜியே டூப்பு… இதுல இது வேறயா…?
திருப்பதி திருமலை தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கியுள்ளதாக ஏழுமலையான் பக்தர்கள் புகார் தந்துள்ளனராம். திருப்பதி பாலாஜியே போலிதான் என்பது இந்தப் பக்தர்களுக்குத் தெரியுமா?அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் நக்கீரனில் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? தொடரில் புட்டுப் புட்டு வைத்துள்ளார். ஏழு குன்றுகள் உள்ளதால் ஏழுமலை எனப் பெயர் பெற்ற திருப்பதியில், மலையில் வாழும் பழங்குடி மக்கள் மலைக்காளி உருவத்தைக் கல்லில் வடித்து வழிபட்டு வந்தனர். பல ஆண்டுகள் கழித்து அங்கு சென்ற பார்ப்பனர்கள் ஆகமங்கள், மந்திரங்கள் என அவர்களுக்குப் புரியாதவற்றைக் கூறி அச்சமூட்டினார்களாம்.
பின்னர் அந்தக் கடவுளை ஆண் கடவுளாக்கி பழங்குடி மக்களிடமிருந்து கைப்பற்றினார்கள் என்கிறார் தாத்தாச்சாரியார். (நக்கீரன் வெளியீட்டில் இந்நூல் தற்போதும் விற்பனையில் உள்ளது. www.thathachariyar.blogspot.in /2011/01/76-to-82-1.html என்ற வலைத்தள முகவரியில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம்.) பல மணிநேரம் காத்திருந்து இந்தப் போலிக் கடவுளைக் காணச் செல்லும் பக்தர்களே… அக்னிஹோத்ரம் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்.