ஒன்னுக்கு
ஒம்பது இடத்துல
ஜாதகம் பாத்து
பத்துக்கு
இருபது பேரிடம்
பொண்ணு எப்படி
மாப்பிள்ளை எப்படினு விசாரிச்சு
கெட்ட நேரம்
நல்லநேரம் பாத்து
சாமிக்குச் செய்யிற
சடங்குல இருந்து,
அர்ச்சகருக்கு
அம்பது நூறுனு அழுது
கண்ணீரும் கவலையுமா
பெத்தவ நிக்கா…
மக வாங்கி வந்த
விவாகரத்த நெனைச்சு!
– ஆல.தமிழ்ப்பித்தன்,
புனல்வேலி