உருமாறும் தமிழ் அடையாளங்கள் (2)- எஸ்.ராமகிருஷ்ணன்

மார்ச் 16-31

தமிழ் – தமிழன் பிளவுபட்டது எப்போது?

517 கவிஞர்கள் எழுதிய இலக்கியங்கள்தான் சங்ககால இலக்கியம். சங்க கால இலக்கியத்தில்கூட பிரதான கவிதைகள், இவர்கள் குறிப்பிட்ட, இவர்கள் காட்டிய புத்தகங்களுக்குள் இருக்கிற, பெயர்களில் இடம்பெற்ற மன்னர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்தானே இருக்கும். இதுதான் நமக்கு இருக்கக்கூடிய இலக்கிய வரலாறு.

இலக்கிய வரலாறு எழுதும்போது, இலக்கியத்தினுடைய வகைப்பாடுகளினுடைய வரலாறை எழுதியிருக்கிறார்களே தவிர, இலக்கியம் உருவானதன், பின்புல வரலாறு, ஷிஷீநீவீணீறீ லீவீஷீக்ஷீஹ் ஷீயீ லிவீமீக்ஷீணீக்ஷீமீ என்று சொல்லப்படக் கூடிய, இலக்கியம் உருவான சமூக வரலாறை எழுதவில்லை. ஏன் ஓர் குறிப்பிட்ட காலகட்டத்தில், இலக்கியத்தில் கவிதை முதன்மை பெறுகிறது? ஏன் இன்னொரு காலகட்டத்தில்,  பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் என்று மதம் சார்ந்த நூல்கள் முதன்மை பெறுகின்றன. ஏன் இன்னொரு காலகட்டத்தில் சிற்றிலக்கியங்கள் வருகின்றன. ஏன் ஒரு காலகட்டத்திலேதான் தமிழனுடைய அய்ம்பெருங்காப்பியங்களுமே வந்திருக்கின்றதே, அதுக்கப்புறம் காப்பியங்களின் மரபு ஏன் துண்டிக்கப்பட்டது? தமிழனுக்கு அய்ந்துதான் காப்பியம். சரி, ஏன் மரபு துண்டிக்கப்பட்டது? அந்த மரபிலும்கூட பவுத்தம், சமண காப்பியங்கள் இருக்கிறதே தவிர, தமிழனுக்கென்று இவ்வளவு தமிழர்கள் வாழ்ந்தும்கூட தமிழ்க் காப்பியங்கள் எழுதவில்லையா என்ன? எழுதியிருக்கிறார்கள் என்றால் எது தமிழ்க் காப்பியம்? தமிழ்க் காப்பியத்திற்கென்று என்ன மரபு இருக்கிறது.

 

இந்த மரபை எதிலிருந்து நாம் கருதுகிறோம், நம்முடைய இலக்கியங்களில் வரலாறு என்பது இலக்கிய வகைமைகளின் வரலாறு, கவிதை எப்போது தோன்றியது, உரைநடை எப்போது தோன்றியது, நாடகம் எப்போது தோன்றியது, நாவல் எப்போது தோன்றியது என்று வரலாற்றுப்பூர்வமாக இந்த வகைமைப்படலை உருவாக்கியிருக்கிறோமே தவிர, இவற்றிற்குப் பின்புலமாக உள்ள அரசியலை, சமூக மாற்றத்தை அன்றிருந்த வாழ்க்கை முறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். இந்த இரு பெரும் குறைபாடுதான் இன்று தமிழனுடைய பண்பாட்டு வீழ்ச்சிக்கான முக்கியமான காரணங்கள் என கருதுகிறேன். தமிழ் தன்னுடைய வரலாற்றை மாற்றி, வரலாற்றைப் புதுப்பித்து முழுமையான வரலாற்றுப் பார்வையை நமக்கு உருவாக்கத் தவறிவிட்டது. நம்மிடம் இருக்கக்கூடிய இலக்கிய வரலாறுகளை பெருமைபேசக் கூடிய இலக்கிய வகைமைகளை பேசும் வரலாறுகள்தானே தவிர உண்மையான தமிழ் இலக்கியத்தினுடைய வரலாறு என்பது இன்னுமா எழுதப்படவில்லை? இது ஒரு கருத்தியல் தளத்தில் குறைபாடு என்றால், ஒரு சாமானியனுக்கு வரலாறும் சரி, இலக்கியமும் சரி அவனைப் பொறுத்தமட்டில் இரண்டாம் பட்சம்தான். அவனுக்கு அந்த வாழ்க்கை முக்கியம்! அவன் வாழ்க்கை எதை நம்பி இருக்கிறது. நிலத்தை நம்பி இருக்கிறது. நிலம் சார்ந்த அவனுடைய வாழ்க்கை இருக்கிறது. அந்த நிலத்திலிருந்து அவன் அகற்றப்படுகிறான் அல்லது நிலம் அவனிடமிருந்து பறிபோகிறது. நிலம் சார்ந்த ஓர் வாழ்க்கையில் ஜாதியும் இருக்கிறது. மதம் உருவாகி இருக்கிறது. மதம் காரணமாக அவன் ஒடுக்கப்பட்டிருக்கிறான். ஜாதியின் காரணமாக அவன் பிளவுபடுத்தப்படுகிறான். தமிழ் என்ற ஓர் அடையாளத்தை முதன்மைப்படுத்த முடியாமல் எது செய்கிறது? ஒருவரிடம் நான் சொல்கிறேன் நான் தமிழன், அவர் உடனே சொல்கிறார், தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும், ஒரே பெயராக இருந்தாலும், நமக்குள் எத்தனை பேதம், எத்தனை ஜாதி, எத்தனை கட்டுப்பாடுகள். நீங்களும் தமிழன், நாங்களும் தமிழன், நான் உங்கள் வீட்டிற்கு வரலாம். நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். ஆனால் இன்னொரு ஜாதியைச் சார்ந்தவர். நம்முடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறோமே, அவர் தமிழர் இல்லையா? அவரும் இதே ஊரில் பிறந்து இதே தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்தவர்தானே, ஜாதியும் தமிழை ஏன் துண்டாடிக் கொண்டிருக்கிறது. அப்போது நமக்கு என்ன இருக்கிறதென்றால், நாம் பரம்பரை வரலாற்றைப் பார்க்கிறபோது இந்த வரலாறு எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  இந்த வரலாற்றைப் பற்றி, ஏ.கே.ராமானுஜம் என்ற ஆய்வு அறிஞர் ஒரு வகைமைப்பாட்டைச் சொல்கிறார். தமிழ் என்பது பொதுவாக ஓர் அடையாளமாக உருவாக்கப்படும்போது, இரண்டு முக்கியமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.1. திஷீக்ஷீனீணீறீ, 2. ஹிஸீயீஷீக்ஷீனீணீறீ.  திஷீக்ஷீனீணீறீ என்று சொல்லப்படக்கூடிய செவ்வியல் வடிவமாக இலக்கியப்பூர்வமாக பேசப்படக்கூடிய தமிழ்மொழி, தொல்காப்பியத்தைச் சொல்வோம். இலக்கணப்பூர்வமாக உணர்ச்சிப்பூர்வமான எழுத்துகளைச் சொல்வோம். இதில் உருவான ஒரு திஷீக்ஷீனீணீறீ ஆன இலக்கணப்பூர்வமான தமிழ்மொழியை தமிழ் அடையாளமாகச் சொல்கிறோம். இன்னொரு அடையாளமாக வட்டாரத்திற்கேற்ப மாறக்கூடிய வழக்கு. பேச்சுத்தமிழ், இலக்கணத்தமிழ் என்று ஒன்றாகவும் பேச்சுத்தமிழ் என்ற ஒன்றாகவும், இரண்டு தமிழ், தமிழ்நாட்டில் இருக்கிறது. பேச்சுத்தமிழில் இரண்டு இருக்கிறது. 1. ஒழுங்குபடுத்தப்பட்ட பேச்சுத்தமிழ். நான் பேசுவது எந்த மாவட்டத்தைச் சார்ந்தவருக்கும் புரியும்.  பொது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களை, பொதுமைப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, ஒரு பேச்சுமொழி. இன்னொன்று . ஒழுங்குபடுத்தப்படாத பிராந்திய சொற்களுக்கு அதிகமான முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு வட்டார மொழி. நீங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தால் உங்களுக்குத்தான் தெரியும், இன்னொரு மாவட்டத்தைச் சார்ந்தவருக்குச் சொல்லும்போது பொருள் புரியாது.

தமிழில்தான் சொல்கிறார், ஆனாலும் அந்த தமிழ்ச்சொல் இன்னொரு மாவட்டத்தைச் சார்ந்தவருக்குப் பொருள் புரியாது. இந்த வட்டார வழக்குச் சொல்லைச் சொல்லும்போது, ராமானுஜம் குறிப்பிடும்போது, இந்த வட்டார வழக்கு  வருவது பொதுமரபாகத்தான், இதுவரைக்கும் எல்லா மொழிகளிலும் இப்படித்தான் கட்டுமானங்கள் இருக்கு. தமிழில் மட்டும்தான் இன்னொரு கிளை இருக்கிறது. என்னவென்றால், பிராமணர்கள் பயன்படுத்தும் தமிழ், பிராமணர் அல்லாதோர் பயன்படுத்தும் தமிழ் என்றும், பிரிவு இருக்கிறது. ராமானுஜம் சொல்கிறார். பிராமணர்கள் பயன்படுத்துகிற தமிழ் என்பது உயர்ந்த தமிழ் போன்றும், பிராமணர் அல்லாதோர் பயன்படுத்துகிற தமிழ் தாழ்ந்த தமிழ் போன்றும், ஒரு ஒதுக்கப்பட்ட கீழான தமிழ் போன்றதுமான ஒரு மாயையை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கு உருவாக்கிய பிறகு, இதற்கப்புறம் ஓர் அட்டவணை போகிறது. இந்த அட்டவணையுடன் வலது பக்கத்தில் வருபவை அத்தனையுமே பிராமணர்கள் உருவாக்கிய விழுமியங்கள். உருவான மொழிப் பண்பாடு.அதில் உருவான கருத்துருவாக்கங்கள், இடது பக்கம் இருக்கக்கூடிய அத்தனையும் பிராமணர்கள் தவிர்த்த மற்ற அனைத்து மக்களும் பயன்படுத்துகின்ற தமிழ். எங்கே இந்த தமிழ் அடையாளம் தொலைந்து போனதென்றால், பிராமணர்கள் தமிழ் பேசுவதை, நீஷபாசை என்றும், அவர்களேதான் உருவாக்கினார்கள்! சொல்லிவிட்டு ராமானுஜம் மீண்டும் சொல்கிறார்:_ தமிழ்மொழி இப்படிப் பிளவுபட்டதற்கு, மொழியின் பின்னால் உள்ள அரசியல். இந்த அரசியலுக்கு ஒரு வரலாறு இருக்கிறது.

இந்த வரலாற்றைத்தான் நண்பர்களே, நாம் இன்றைக்குவரை திரும்பத்திரும்ப கவனிக்கவும், ஆய்வு செய்யவும் வேண்டி இருக்கிறது. அய்யா பெரியார் அவர்கள் தொடர்ந்து மதம் மனிதனை எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். நாம் அந்தச் சிந்தனையைக் கைக்கொள்கிறவர்களாக இருக்கிறோம். நாம் மதத்தினுடைய, வரலாற்றைத் திரும்பவும் முழுமையாக ஆராயவில்லை, மதத்தினுடைய சடங்குகளை ஆராய்கிறோம். மதம் உருவாக்கிய தனிமனிதன் மீதான பாதிப்புகளை ஆராய்கிறோம். மதம் ஒரு கோவிலாக உருக்கொண்ட வரலாற்றை ஆராய்கிறோம். மதம் எப்படி நுழைந்தது, தமிழகத்திற்குள் இருந்த உண்மையான பழைய சமயம் எது? எந்தச் சமயம் எந்த நூற்றாண்டிலே வந்தது?  சமய வருகையால் தமிழகத்திலே என்ன நடந்தது? ஏனென்றால் இன்றைய தமிழகத்தின் இன்றைய பிரச்சினையல்ல! இதற்கொரு வேர் இருக்கிறது. நாம் இங்குக் காணும் வரலாற்றினுடைய குழப்பமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நூற்றாண்டில் தவறுகள் இல்லை. எல்லாமே விவாதத்திற்குட்பட்டு, கேள்விக்குட்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு வரலாறு என்பது உண்மை பேசுபவர்களுக்கான ஒரு விஷயம் மட்டும் கிடையாது. உண்மையைச் சொல்வதற்கான _ உண்மையை அறிவதற்கான ஒரு தேடும் வழி. இந்த உண்மையைத் தேடுகிற எல்லோருமே வரலாற்றைத் தேடுகிறவர்கள்தான். ஆனால், என்ன உண்மையென்று அவர்கள் சொல்லும்போதுதான் அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியும். தமிழர்களுக்கு வந்து வெளியிலிருந்துதான் மதங்கள் வருகிறது. வெளியிலிருந்து வருவதற்கு முன்னாடி தமிழர்களுடைய மதம் என்னவாக இருந்தது?
சிவனை வழிபட்டிருக்கிறார்கள். திருமாலை வழிபட்டிருக்கிறார்கள். முருகனை வழிபட்டிருக்கிறார்கள். கொற்றவையை வழிபட்டிருக்கிறார்கள். இப்படி வழிபட்ட தமிழர்களிடம் சமயப்பூசல்கள் கிடையாது. தமிழர்கள் வேறுபட்ட தெய்வங்களை வணங்கியிருந்தாலும், அந்தத் தெய்வங்கள் நிலப்பரப்புக்கு ஏற்ப மாறுபட்டிருந்தாலும், தமிழர்களுடைய சமயத்தின் வருகை எதை உருவாக்கியது என்றால், மனிதனைப் பிரித்தாள வைக்கக்கூடிய, இன்னும் சொல்லப்போனால், மனிதர்களுக்குள் பேதத்தை உருவாக்குகிற ஒன்றை, வெளியிலிருந்து வந்த மதங்கள்தான் முதன்முதலில் தமிழகத்தில் தொடங்கியது. நான்கு மதங்கள் தமிழகத்துக்குள் நுழைகின்றன. இந்தியாவிற்குள் வடமாநிலங்களிலிருந்து, தமிழகத்திற்கு நான்கு மதங்கள் வருகின்றன. ஒன்று பவுத்தம், இன்னொன்று சமணம் என்று சொல்லக்கூடிய ஜைன மதம். இன்னொன்று ஆசீவகம். ஆசீவகம் பற்றிய வரலாறு நமக்குத் தெரியாது. அப்படி ஒன்று வந்ததா, இல்லையா என்று அதைப்பற்றிப் பொருட்படுத்துவது இல்லை.

இன்னொன்று வைதீகமதம் என்று சொல்லக்கூடிய பிராமண மதம். இவை நான்கும் வெளியிலிருந்து வருகிறது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில், தமிழனுடைய வாழ்க்கை, பண்பாட்டுக் கூறுகளின் மாற்றத்திற்கும் தமிழர்களுடைய வாழ்வுக்கும் கூறுகளுக்கும் அடிப்படைகளை மாற்றுவதற்கும் முயற்சி செய்தது. முதலில் நாம் புத்தமதத்தை எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் புத்த மதம் உருவானதுடைய வரலாறு இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா? நான் தமிழகத்தினுடைய புத்த மதம் சார்ந்த வரலாறை, தேடித் தேடி பார்த்துள்ளேன்.  நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை இருந்தது என்கிறார்கள். நாகப்பட்டினத்திற்குப் போனால் அங்கே இருப்பது வெறுமனான இடிபாடுகள், ஒரே ஒரு உடைந்து போன கல், சரி வேதாரண்யம், நாகப்பட்டினத்தினுடைய கிராமங்களை எடுத்துக்கொண்டால் அங்கேயெல்லாம் புத்தருடைய பிரதிகள் இருக்கிறதென்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து ஊர்களுக்குப் போனேன். பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்க மங்கலம், கோட்டப்பாடி, திருநீலக்குடி, செங்காடு, பள்ளியந்தோப்பு இப்படி எல்லா ஊர்களிலும் புத்தருடைய ஒரே ஒரு சிலை இருக்கிறது. இந்த ஊர்களில் எல்லாம் ஒரு காலகட்டத்தில் பவுத்த வழிபாட்டுத்தலங்கள் இருந்திருக்கின்றன.  பவுத்த விகாரைகள், பவுத்த சடங்குகள் நடந்திருக்கின்றன எனச் சொல்றாங்க. இப்படி பவுத்தத்தினுடைய அடையாளமாக இருந்த பல இடங்கள், பவுத்தம் அசோகருடைய காலகட்டத்தில் தமிழகத்திற்குள் வருது. அசோகருடைய ஒரு சாசனத்திலே அதனுடைய குறிப்பு இருக்கிறது. மயிலை சீனி.வேங்கடசாமி அய்யா தெளிவாகச் சொல்கிறார். அசோகருடைய கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டிருக்கு, சேர, சோழ, பாண்டியர்கள் போல நம்மை ஆண்ட தமிழகப் பகுதியில் இரண்டு மருத்துவ நிலையங்களை அசோகரே உருவாக்கினார் என்றும், இந்தக் காலகட்டத்தில், யுத்தம் போன்ற பணிகளைவிட, அறப்பணியாக கருதப்பட்டது பவுத்தத்தினுடைய அறத்தை மக்களிடையே எடுத்துச் சென்றதுதான் என்றும் இரண்டு குறிப்புகள் காணப்படுகிறது. அசோக சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்த்தால் தமிழகத்தில் அசோகருடைய காலகட்டத்தில்தான் பவுத்தம் வருகிறது.

இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் வந்த பவுத்தம் 6, 7 ஆம் நூற்றாண்டுகள் வரை இருக்கிறது. பவுத்தம் தழைத்தோங்கி இருக்கின்ற காலகட்டத்தில் தமிழ்மொழிக்கு ஆபத்துகள் வரவில்லை, ஏன் வரவில்லை? பவுத்தம் ஓர் நிலைப்பாட்டை எடுக்கிறது. எந்தப் பிரதேசத்திற்குப் பவுத்தம் போனாலும், அங்கிருக்கிற தாய் மொழிக்குத்தான் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தும். பவுத்தம் இன்னொரு மொழியை அழித்து உருவாக்குவதில்லை. இதை, புத்தர் காலகட்டத்திலேயே விவாதம் நடந்ததாக புத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.  புத்தரிடமே ஒரு சீடன் வந்து சொல்கிறான். அய்யா நீங்கள் பேசுகிறது பிராகிருதமோ, பாலியோ போன்ற மொழிகளில்தான் உரையை ஆற்றுகிறீர்கள். இதைப் பதிவு செய்து, பின்னாட்களில் வைக்கப்பட்டால் எந்த மொழியில் வைக்கப்படனும், அல்லது எதில் வைத்தால் இந்த மக்கள் படிப்பார்கள் என்று கேட்கிறான். அன்றைக்குத்தான் சமஸ்கிருத மொழி தொடங்குகிறது, இந்தியாவில், தமிழ்நாட்டில் பார்த்தீர்களேயானால், இரண்டாம் நூற்றாண்டு வரை ஒரு கல்வெட்டு கிடையாது. ஒரு இலக்கியம் கிடையாது.  புத்தர் காலத்தில் அப்படியொரு விவாதம் வருகிறது. சமஸ்கிருதத்தில் நம்முடைய படைப்புகளை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமா என்று கேட்டதற்கு, புத்தர் சொன்னார்,“இல்லவே இல்லை, மக்கள் எந்த மொழியில் பேசுகிறார்களோ அந்த மக்கள் மொழியில்தான் என்னுடைய படைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். சமஸ்கிருதத்திற்கென்று உயர் செம்மொழி அந்தஸ்து கிடையாது. அதைப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்றார்னு புத்த நூல்களே குறிப்பிடுகின்றன. தமிழகத்திலும் கூட புத்தம் வந்தபோது, பவுத்தத்தை மக்கள் தழுவினார்கள். அறநெறியை ஏற்றுக்கொண்டார்கள். பவுத்த மடாலயங்கள் இருந்தன. ஆனால்,அங்கே தமிழ்தான் போதனை மொழியாக, பிரார்த்தனைக்குரிய மொழியாக இருந்தது, தமிழில்தான் பவுத்த நூல்களும் எழுதப்பட்டிருந்தன. இன்னும் சொல்லப்போனால் பல முக்கியமான பவுத்த சிந்தனையாளர்கள் தமிழர்களாக இருந்துள்ளனர். அவர்கள் தமிழ் வழியாகவே பவுத்தத்தைப் பரப்பியுள்ளார்கள். சிந்தனை செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இன்னும் பெரிய உயரத்திற்குப் போனால், பவுத்த சமயத்தினுடைய அறத்தை, உரை எழுதியவர்கள் கூட தமிழ்நாட்டைச் சார்ந்த பவுத்த மதத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பவுத்த மரபு, பவுத்த மதம் வந்தபோது, தமிழுக்குள் _ தமிழ் நிலப்பரப்புக்குள் பெரிய மாற்றம் நடந்ததில்லை. இவர்களோடதான் இணைந்து வந்தது சமண மதம். இன்னும் சொல்லப்போனால் சமணமும், பவுத்தமும் இரட்டை மதங்கள் போலத்தான் வந்தன. இந்த இரட்டை மதங்களைப்போல வந்த சமணம் என்பது பவுத்தத்தை ஒரு வாதுக்கு அழைத்து, பவுத்தர்கள் விட்டுச்சென்ற பணியை, பவுத்தர்கள் செய்யமுடியாத வணிகத்தோடு உள்ள தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சமணம் ஆரம்பிக்கிறது. சமணம் தழைத்தோங்கும்போது பெரிய அளவிற்கு தமிழ் மக்களின் வாழ்க்கையை மாற்றவில்லை. அவர்கள் வாழ்க்கையோடு ஒன்று கலக்கவில்லை. வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழக் கூடியவர்களாக சமணத் துறவிகள் இருந்தனர். மதுரை மாவட்டத்திற்குச் சென்றால் மதுரையைச் சுற்றி 8 குன்றுகள் இருக்கின்றன. 8 குன்றுகள் மீதும் சமணப் படுகைகள் என்று சொல்லக்கூடிய குகைகள் இருக்கின்றன. குகைக்குள் சென்றால், அங்கு அந்தக் காலத்தில் நடைபெற்ற பள்ளிகள். அதாவது இன்றைக்கு இருக்கக்கூடிய பள்ளிகள் போல. அன்றைக்கு ஆசிரியரிடம் மாணவன் கற்றுக் கொள்வதற்கான குகைகள், வழித்தடங்கள் இன்றைக்கும் இருக்கிறன. அங்கே என்ன செய்கிறார்கள் என்றால், ஓர் ஆசிரியர் தங்குவதற்கான அறை, பூமியிலிருந்து போனீர்களேயானால் ஒரு மணி நேரமாகும். உயரத்திலிருக்கிறது மலை. ஏறி மேலே போனீர்களேயானால் அங்கே ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் போனால் ஒரு பக்கம் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக ஒரு 15 அறைகள், படுக்கைகள், கல்லிலியே அடிச்சிருக்காங்க. ஒரு ஆள் நீளத்திற்கு கல்லிலே அடிச்சிருப்பாங்க. கல் மட்டும் கொஞ்சம் வளைவாக அடித்திருப்பார்கள். படுகைன்னு சொல்வாங்க. அப்படி படுகைன்னு 15, 20 படுகைகள் இருக்கு.

பக்கத்தில் குகையினுடைய ஒரு பகுதி தடுக்கப்பட்டு, இன்னொரு பகுதியாக இருக்கு. அதுக்குள்ள என்ன இருக்குன்னா, அதுக்குள்ள ஒரு மேடு. அந்த மேட்டினுள் ஓர் படுக்கை, இந்த இடத்தில் அருகிலுள்ள ஓர் நீர் ஊற்று இருக்கும்.  மாணவர்கள் அந்தக் காலத்திலேயே குகைக்குப் போய் ஆசிரியர்களோடு தங்கி, அங்கேயே கல்விகற்று, மலையிலேயே வசித்து பல ஆண்டுகாலம் கற்றுத் தேர்ந்து ஞானமுடையவர்களான பின்னால் மக்களுக்குச் சேவை செய்கின்றனர். கல்வி என்பது சுயநலத்திற்குப் பயன்படுவன அல்ல. கல்வி என்பது சேவைக்கு பயன்படக்கூடிய ஒன்று. மருத்துவமும், கல்வியும் அவர்கள் சேவையாகத்தான் செய்தார்கள். அதனால்தான் பவுத்தர்கள்தான் முதன்முதலில் குகைத்தளங்களை அமைத்தார்கள். பள்ளி எனச் சொல்லப்படக் கூடிய ணிபீநீணீவீஷீஸீ. கல்வி முறையையே பவுத்தம்தான் அறிமுகப்படுத்தியது. ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கு ஓர் ஆசிரியர். ஒரு மணிநேரம் ஒரு பாடம் நடத்தப்பட வேண்டும். இந்தப் பாடத்தை ஆசிரியர் நடத்திவிட்டு, அதிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு மாணவர்கள் விடை சொல்ல வேண்டும். இந்த விடையை மாணவர்கள் சொல்வது சரிதானா என்று மதிப்பிட்டு, மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இப்படி ஒரு மாணவன்  12 ஆண்டுகாலம் கல்வி கற்க வேண்டும் என்ற முறையெல்லாம் வெள்ளைக்காரன் உருவாக்கியதல்ல. பவுத்தர்கள் உருவாக்கியது. நாலந்தா பல்கலைக்கழகத்தில்தான், முதன்முதலில் பாடப்பிரிவுகள் அமைக்கப்பட்டு பாடம் தனித் துவக்கப்பட்டு, ஆசிரியர்கள் அங்கே வரவழைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *