அன்று
வேலைக்குச் செல்லும் பெண்கள்
ஒழுக்கமற்றவர்கள் – என்று
உளறிக் கொட்டிய ஒழுக்கக் கேடர்!
இன்று
கண்ணில்லாத உடல்
மோட்சமடையாது
அதனால்,
கண்தானம் கூடாது – என்று
செயந்திரர் சொல்கிறார்.
அறிவுக் கண்ணற்ற
அறியாமைக் குருடன்
வாழ்க்கை நெறியற்ற
வருணாசிரம மூடன்.
மாந்தநேய மற்றவன்!
உயிர்நேயம் கொண்டு
உடல் கொடையும்
ஈகம் செய்யும் நாளில்
விடம் கக்கும்
மடத் தலைவன் நீ.
பெண்ணடிமை பேசும் பேதையே!
மடமை தவிர்த்து – பொது
உடைமை காணும்
கடமையோடு வந்திருக்கிறோம்
காரிருள் காமகோடியே
கதிரொளியாய் பெரியார்
விலகிப் போ…
விடியல் வந்திடும்
– பெ.குமாரி, சண்முகாபுரம், புதுச்சேரி