துளிச்செய்திகள்

மார்ச் 16-31

1998-_1999ஆம் ஆண்டு மதிப்புமிக்க வையாகத் திகழ்ந்தன 100 ரூபாய் நோட்டுகள். 2003_04ஆம் ஆண்டில் 100 ரூபாய் தாள்களைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை 500 ரூபாய் தாள்கள் பிடித்தன. 2010_11ஆம் ஆண்டில் நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 47 சதவிகித இடத்தை 500 ரூபாய் நோட்டுகள் பிடித்துள்ளன.

1970_90 வரை 50 சதவிகித இடத்தைப் பிடித்திருந்த 100 ரூபாய் 2010_11ஆம் ஆண்டில் 14.8 சதவிகிதமாக குறைந்தது.

1970_71இல் 34.3 சதவிகித இடத்தைப் பிடித்திருந்த 10 ரூபாய் நோட்டுகள் 2010_11இல் 2.2 சதவிகிதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1992_93இல் 32.1 சதவிகிதமாக இருந்த 50 ரூபாய் நோட்டுகள் தற்போது 1.7 சதவிகிதமாக உள்ளது.

2000_01இல் அறிமுகம் செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் 27.8 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளன என்று இந்திய கரன்சி புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


  • ஆந்திரா, சிறீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மய்ய ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. _ சி 20 ராக்கெட் 7 செயற்கைக்கோள்களுடன் (25.2.13) வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
  • கடற்பாசி எண்ணெய் மூலமாக அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பெண்களுக்கான தனி வங்கி நவம்பர் மாதம் முதல் செயல்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

  • மணிப்பூரில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப்  பெற வலியுறுத்தி கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் மனித உரிமைப் போராளி இரோம் சார்மிளா மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *