Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளை சமசரப்போக்கு மூலமாக முறியடித்து விடக் கூடாது. பெண்களை அவமானப்படுத்துதல், துன்புறுத்தல் போன்றவற்றில் சமரசத்துக்கு முயலுவது நீதியைக் கவிழ்ப்பதுடன் பெண்களின் கவுரவத்தை சற்றும் பொருட்படுத்தாத தையே காட்டுகிறது.
– நாடாளுமன்ற மேலவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி

பெண்ணின் மனவலிமை இயல்பாகவே ஆண்களின் ஈகோவை உசுப்புகிறது. அவள் நமக்கு சமமாக இருக்கிறாள் என்பதையே பெரும்பாலான ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆண்களின் பார்வை மாற வேண்டும்.
திரைப்பட நடிகை குஷ்பு

நம்ம பேருக்கு, புகழுக்கு, பணத்திற்கு உழைத்துவிட்டு, `ரொம்ப கஷ்டப்பட்டேன்னு சொல்லிக்கிறது நல்லாவா இருக்கு? கடமையையும், செய்ய வேண்டிய உழைப்பையும் கஷ்டம்னு சொன்னால் அவனை விட சோம்பேறி யாரும் கிடையாது. – திரைப்பட இயக்குநர் பாலா