Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுள்களுக்கு என்ன தண்டனை ??

அமைச்சர்களைக் கூட, அய்ந்து ஆண்டுகளுக்குள் ஒரு முறையாவது தொகுதியில் நேரில் பார்த்து விடலாம். ஆனால், அத்தனை பேரையும் காப்பதாய் சொல்லப்படுகிற ஆண்டவனை, சாகிற வரை எந்த பக்தனாலும் நேரில் பார்க்க முடியாது. தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர், தங்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள,  அடிக்கடி தொகுதிக்கு நேரில் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புவார்கள்.

அப்படி வரவில்லை என்றால்  அடுத்த தேர்தலில் அவருக்கு சரியான பாடத்தைக் கற்பிக்கவும் தயங்க மாட்டார்கள்.

அதே மக்கள் – தங்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள ஆயுளுக்கும் நேரில் வராத கடவுள்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள்….? அமைச்சருக்கு ஒரு நியாயம்… கடவுள்களுக்கு ஒரு நியாயமா??

– செல்வன்