எங்கே போனார்கள்?

பிப்ரவரி 16-28

தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்று வருந்திப் பாடினார் பாவேந்தர். கடந்த தி.மு.க.ஆட்சியில் சென்னை மாநகராட்சிப் பகுதிக் கடைகளில் தமிழில் எழுத வலியுறுத்தப்பட்டது.அன்றைய மேயர் மா.சுப்பிரமணியம் தெருத்தெருவாகச் சென்று எழுதவும் வைத்தார். இன்று அந்த நிலை தொடருகிறதா? தி.மு.க.ஆட்சி மாறிய உடனேயே தமிழ் வணிகர்கள் மீண்டும் இங்கிலீசுக்கு மாறிவிட்டார்கள்.அ.தி.மு.க.ஆட்சி கொஞ்சமாவது கவலைப் பட்டதா? தி.மு.க.ஆட்சியில் `தமிழ்…தமிழ் எனக் குரல் எழுப்பும் தீவிர(?)தமிழ் உணர்வாளர்கள் இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல,சென்னை சாலைகளில் இருபுறங்களிலும் தமிழ்ப் பண்பாட்டு ஓவியங்களை தி.மு.க. அரசு அழகாக வரைந்திருந்தது. இளைய தலைமுறைக்கு எடுத்துச் சென்ற தமிழரின் கலை ஓவியங்களை அ.தி.மு.க.அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அழித்துவிட்டது.தீவிரமாகத் தமிழ்ப் பேசும் ஒரு அமைப்பும் இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை.

தமிழை, தமிழரின் கலைகளை திராவிட இயக்க ஆட்சி தூக்கிப் பிடித்தது;

அதனை ஆரியம் இன்றைக்கு அழிக்கிறது;திராவிடத்துக்கு எதிராகப் பேசிவரும் சில தமிழ்(?)தீவிரங்கள் வாய்மூடி மவுனியாக இருக்கின்றன.

இந்த முண்டங்கள்தான் சொல்கின்றன-திராவிடத்தால் வீழ்ந்தோமாம்?

ஆரியத்தால் வீழ்த்தப்பட்டோம் என்பதும் உண்மை;

இப்போதும் ஆரியத்தால்தான் வீழ்த்தப்பட்டுவருகிறோம் என்பதும் உண்மை.

அதற்கு இதைவிடவா வேறு சாட்சி வேண்டும்?

–  திராவிடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *