Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

சுவைக்கிறது எச்சில்களை சுப்ரபாதம்

ஆக்கிரமிப்பு
அரசியல்வாதி
பொறம்போக்கு நிலம்

மிருகங்களுடன்
கடவுள் ப்ளுகிராஸ்

கிழிந்தது
செவிப்பறை
ஜால்ராக்கள்

எரித்துவிடும்
தலைகனம்
தீக்குச்சி

பழிக்குப்பழி
இந்தியா
காந்திமண்

விரட்டியடிப்பு
உலக நாடுகள்
ஊர்க்குருவிகள்

வெட்கப்படுகின்றன
வேட்டிகள்
தொடை நடுங்கிகள்

தொடர் பிடிவாதம்
காவிரி
மயிலே, மயிலே…

இறைப்பற்று
சிறைக்குள் பூசை
இந்துத்துவா

மோடி மஸ்தான்
கண்கட்டி வித்தை அறமன்றம்

தேய்ந்தன பாதங்கள் மனு

குதிரைச் சவாரி
கூட்டணி ஆட்சி
பொய்க்கால் குதிரை

மனிதர்களானோம்
மிருகங்களிடமிருந்து
சாக்ரடீஸ்

வேதனை இருக்க இடமில்லாதவன்
ஏழாம் இடத்தில் சனி

சங்கத்தமிழ்
இடைச்செருகல்
பொங்கு தமிழ்

– புதுவை ஈழன், புதுச்சேரி


அனுபவம்

பட்டதைச் சொல்லி வைத்தார்
தாத்தா
பட்டுப்போய் உணர்ந்தான்
பேரன்

அசம்பிரதாயம்

ஒன்பதாவது மாதத்தில்
காப்புயிட்டு
தலைப்பிரசவத்திற்கு
அம்மாவீடு வந்திருக்கிறாள்
அன்னபூரணி

அடுத்த வாரிசைக் காணும் பூரிப்பில்
இருவீட்டாருமென்றாலும்
அடுத்தடுத்த செலவின் பதற்றத்தில்
எப்போதும் பெண்வீடு

– செழியரசு, தஞ்சை


 

 

கல்விக் கொடை!

அப்பன் தொழில் மறந்தது
அரசுப் பதவி வந்தது கல்விக்கொடை!

முடவன்
எழுந்து நடந்தான்
தன்னம்பிக்கை!

மந்திரத்தால் முடியாதவற்றை
எந்திரங்கள் செய்கின்றன
அறிவியல்!

அன்னியக் கம்பெனிகள்
உள்ளூர்த் தண்ணிக்கு விலை
ஆனந்த சுதந்திரம் !

நம்மூரில் விற்கும் பெட்ரோல்
சர்வதேச சந்தை விலை
புதிய பொருளாதாரம்!
சவப்பெட்டி – வீட்டு ஊழல்
கார்கில் போரில் மரணம்
இந்திய மானம் !

நோஞ்சான் குழந்தை தேவாங்கு கயிறு
சத்துணவில் முட்டை!

படித்தது மருத்துவம்
பார்ப்பது ஜோதிடம்
வருமானம்!

அம்மைக்கு வைத்தியம்
அம்மனுக்குத் தாலாட்டு
அறியாமை!

மழை வேண்டி கழுதைக்குக் கல்யாணம்
ஏக்கத்துடன் கன்னிப்பெண்!

ஊர் கூடி
தேர் இழுத்தது
வீணான மனித சக்தி!

– கு.நா. இராமண்ணா, சீர்காழி


 

 

வடிகால்

அக வலிக்கும்
புற வலிக்கும் – கண்ணீரே
வடிகால்.

வண்டுக்காக

மலர் மணத்தோடு வண்ணமும்
அள்ளித் தெளிப்பது
மானிடர்க்கல்ல
மகரந்தம் மாற்றும் வண்டுக்காக – பாவலர் அறிவரசன், திருலோக்கி

வழக்கு!
மனுதாரரும்…
இறந்தார்!…..
எதிர்மனுதாரரும்…
இறந்தார்!…
ஆனால்….வழக்கு
இன்னும் முடியவில்லை!….
நீதிமன்றத்தில்!!…

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்