குரல்

மார்ச் 01-15

அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகளுக்கு மட்டுமே நாங்கள் யுரேனியம் விற்பனை செய்வோம்.  மற்ற நாடுகளுக்கு யுரேனியம் விற்பனை கிடையாது.

– மார்ட்டின்,
கனிமவள மந்திரி, ஆஸ்திரேலியா

மாறுபட்ட மதங்களும், நம்பிக்கைகளும், பண்பாடுகளும், சமூகங்களும் உள்ள ஒரு நாட்டில் மதச் சார்பின்மைக் கோட்பாடு மிகவும் அவசியமாகிறது.  அரசு என்பது எந்த மதத்தையும் சாராததாக குடிமக்களின் நம்பிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.  மதத்தின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடுகளும் இருக்காது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

– அசோக்வர்தன் ஷெட்டி
அய்.ஏ.எஸ். தமிழக அரசின் முதன்மைச் செயலர்.

மலையாளிகளுக்குச் சென்னை புதிய ஊர் இல்லை.  சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மலையாளிகளும் மொழி, இனம் கடந்து சகோதர சகோதரிகளாக வாழ்கின்றனர்.

– அச்சுதானந்தன்,
கேரள முதல் அமைச்சர்

8 கல்வியை இலவசமாகக் கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது.  மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்

– உச்ச நீதிமன்றம்

நாத்திகத்தை யாரும் கற்றுத்தர முடியாது.  அதை உணர வேண்டும்.  எனக்கு உணர்த்தியது அகால மரணங்கள்.  ஜானி என்ற என் ஆட்டுக்குட்டியிடம் ஆரம்பித்த பாடம் அது.  இதோ, ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்பு வரை இவ்வளவு கொடுமைகளைப் பார்த்த பிறகும், நாத்திகம் பேசாமல் இருக்க முடியுமா?

– பாலா
திரைப்பட இயக்குநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *