முகநூல் பேசுகிறது

ஜனவரி 01-15

Chandran Veerasamy ” கரூர் அருகே உள்ள கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை!

## ” ஊரையெல்லாம் காக்க வேணாம் தாண்டவக் கோனே, உன் உண்டியலைக் காப்பாத்து தாண்டவக் கோனே ! ##

– Chandran Veerasamy ” 23 பீமீநீ 2012,3.00pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது !

## திருப்பதியில் இன்னைக்கு தொறந்தான் ; சீரங்கத்தில் நாளைக்குத் தொறக்குரான் . உண்மையிலேயே சொர்க்க வாசல் எப்படா , எங்க தொறப்பீங்க ? ##
**இதுதான்… இதுதான் நெத்தியடி கேள்வி அய்யா.. முதலில் தெருவுக்குத் தெரு டாய்லட் திறந்தால் போதும்..

– சொல்கேளான் கிரி

பையன் தோளில், இரண்டு பெண் குழந்தைகள் இரண்டு கைகளில், முட்டாள் தகப்பன் தீயில் சறுக்கி விழ பாவம் பிஞ்சுகள் தீயில் துடிக்கின்றன.

அறிவு கெட்ட ஜனங்களிடம் போய் தீ மிதிக்காதீங்க, வாயில வேல் குத்தாதீங்க ன்னு சொன்னா அடிக்க வருவாய்ங்க.

ஏன்னா மனுஷனா வாழறதை விட ஈசியான விஷயம் இப்படி தீ மிதிக்கிறதோ, அலகு குத்தறதோ தானே ? ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையான அன்போட வாழச் சொன்னா மாட்டாங்க. ஏன்னா அது கஷ்டமாச்சே !

எண்ணிக்கு தான் இந்த முட்டாள் ஜனங்க திருந்தி மனுஷனா வாழ ஆரம்பிப்பாங்களோ ? காட்டுவாசிக் கூட்டத்துக்கு நடுவிலே வாழறமாதிரி ஒரு ஃபீலிங்.

ஏதாச்சும் நல்லதுக்கு சொன்னா ஏன் அவன் அப்படி பண்ணலீயா, இவன் இப்டி பண்ணலீயான்னு கேப்பீங்க. எப்பிடியோ போய் தொலைங்க. தீ மிதிங்க, இல்லேன்னா வீட்டுக்கே தீ குடுங்க.

பாவன் பிள்ளைங்க. அதுகளையும் பிஞ்சிலேயே தீஞ்சு போக வெச்சுடாதீங்க.

– உன்னைப்போல் ஒருவன், 21 dec 2012,12.16 am

எல்லாம் எங்க மத நூலில் இருக்கு, நாளைக்கு நடக்க இருப்பதும் எங்கள் புனித நூலில் இருக்குன்னு சொல்றீங்களே,

வருங்காலத்தில் மனுஷன் குதிரை,காளைகளுக்கு விடுதலை கொடுத்திட்டு இயந்திரத்தில் வண்டியை ஓட்டுவான்னு ஏதேனும் போட்டிருக்கா?

மண் ரோட்டுக்கு பதிலா தார்சாலைகள் அமைக்கப்படும் என்று உங்கள் நூலில் போடப்பட்டிருக்கா?
நிலாவில் கால் வைப்பான்னு ஏதேனும் தகவல் இருக்கா?

பாவம் செய்தவன் அதான் குழந்தை பிறக்கலேன்னு சொல்வீங்களே, டெஸ்ட் ட்யூப் பேபி, குளோனிங் குழந்தை இதைப்பற்றியெல்லாம் உங்கள் மத நூலில் குறிப்பிடப்பட்டிருக்கா?

– – Rajesh Deena, 23 dec 2012,7.55.pm

மரம் கூறும் அறம்” ## ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சமாகும்.பத்து எர்கண்டிஷ்சன் மெஷின்கள் இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்ப்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது ##
பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.

பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு – ரூ.2.50 .(லட்சத்தில்)
காற்றினைச் சுத்தமாக்குவது – ரூ .5.00.””
பூமியின் மேலே இருக்கும் மண்சத்து-
குறையாமல் பாதுகாக்க – ரூ.2.00. ””
காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்க – ரூ .3.00. ””
பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பது – ரூ .2.50. ””
உணவுச் சத்துக் கொடுப்பது – ரூ .0.20. ””
பூக்கள் மற்றவை வழங்குவது – ரூ .0.20. ””
மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சம் மதிப்பு.
இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை வெட்டிச் சீரழிக்கலாமா.
மரங்களை வளர்ப்போம் மனிதகுலம் காப்போம்.
வாழ்க வளமுடன்.

– D Shakthi Vel, 23 dec 2012,1.45.pm

 

தண்ணீ ர் இல்லை
விவசாயம் இல்லை
ஆனால்,
பூச்சி மருந்து மட்டும் அமோக விற்பனை
விவசாயிகள் தற்கொலை!
சாகுபடி இல்லை
சாகும்படி நிலை!

– Prince Ennares Periyar,
23 dec 2012,11.29.am

 

இந்தியாவே அலறுகிறது. . .

முத்தமிழ் வேந்தன் 21 dec 2012,
10.24 am

tamil punch dialogues

 

பிரபா அழகர்

 

திருபபதி ஏழுமலையானுக்கு செல்போன் மூலம் இனி பணம் அனுப்பலாம்.-  நிர்வாகம் அறிவிப்பு.
## அப்படியே… ஏழுமலையானிடம்செல்போனில் பேச ஒரு வாய்ப்பு ஏற்பாடு பண்றீங்களா…? ##
– Dhalapathi Raj, 18 dec,2012,12.08 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *