ஜாதி மதங்களைக் கடந்த
மனிதனாக வாழ வேண்டுமென்று
விரும்புகின்றாயா?
அதற்கு எளிய வழி
கடவுளை மற
பெரியாரை நினை.
– அமுதாராம், மன்னார்குடி-1
பசி
பிறந்த நாளை மகிழ்ச்சியுடனும்
இறந்த நாளை கண்ணீருடனும்
ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை
மகிழ்ச்சியோ, வருத்தமோ இன்றி
சுவைத்து சாப்பிட்டன
நகரத்து மாடுகள்.
சில்லறைத்தனம்
நட்சத்திர ஓட்டலில்
நாசுக்காய் சாப்பிட்டு
பில்லுடன் பரிமாறியவருக்கு
சில்லறைகளை எண்ணாமல் தந்து
வெளியே வந்தவன்
தன் காலணி சீர் செய்த
கூலித் தொழிலாளியிடம்
பேரம் பேசி சில்லறை தந்தான்.
– பாவா. செயக்குமார், கீழ்வேளூர்
களிமண்
கல்லைக்
கடவுளாக்கிய
மனிதன்
மூளையைக்
களிமண்ணாக்கிக்
கொண்டான்
– வீ.உதயக்குமாரன், வீரன்வயல்
எங்கிருந்து வந்ததடா…
நானும் நீயும் நாலாஞ்ஜாதின்னு
சொன்னவனை விட்டுவிட்டு
நமக்குள்ளே கொளுத்திக்கிட்டா
நல்லாதான் அவன் குளிர்காய்வான்…
எங்கிருந்து வந்ததடா உனக்குள்ளே ஜாதிவெறி!
ஓடி, ஓடி களையெடுத்தோம்!
ஒண்ணா நாம் நெல்லறுத்தோம்!
நேற்று வரை அக்கா, தங்கை
இன்று அவள் தாசிமகளோ?
இதுவரை நடக்கலையா?
நமக்குள்ளே திருமணங்கள்
நாமெல்லாம் மாமன் மச்சான்
ஈனர்களுக்கு பொறுக்கலையே
இதப் புரிஞ்சுக்கிட்ட நமக்குள்ளே… வெறுப்பில்லையே!
– நா. சுப்புலட்சுமி, திருப்பத்தூர் (வே.மா)
Leave a Reply