Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

”டென் பர்சண்ட் கட்

முன்பு ஒருமுறை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 10 சதம் சம்பளத்தில் வெட்டு இருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் இவர்கள் நடத்திய நாடகத்தை முன் வரிசையில் ராஜாஜி உள்பட பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நாடகத்தின் முதல் சீனில் என்.எஸ் கிருஷ்ணனுக்கு மதுரம் காபி கொண்டு வந்து கொடுப்பார். அன்று கொடுக்கப்-பட்ட காபியில் சர்க்கரை போட மறந்துவிட்டார்கள். கிருஷ்ணன் ஒரு வாய் காபியைக் குடித்துவிட்டு காபியிலே சர்க்கரையே இல்லையே? என்று கேட்டார். மதுரம் சற்றும் நிதானிக்காமல், டென் பர்சன்ட் கட் என்று சாதுர்யமாக பதிலளித்தாராம். இதைக் கேட்டு ராஜாஜி உள்பட எல்லா அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்களாம்.

-மு.அன்புக்கரசன், பெரியகுளம்