Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திலகர் சொல்கிறார் . . .

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?

“இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?” என்று பேசினார்.

ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ”காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?” என்ற நூல்.


பார்ப்பனரின் இனப்பற்று

வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் “”……………. அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா”” என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.

(ஆதாரம்: “”வட மாநிலங்களில் தமிழர்”” . – ஆசிரியர் சோமலே. பக்கம் 2)