அய்யாவின் இதயத் துடிப்பு
அழகான குழந்தைச் சிரிப்பு
இனமான சூரிய விழிப்பு
கடிகார கால்களின் உழைப்பு
அய்யா வீரமணி
தமிழின எழுச்சி தந்தை பெரியார் – அந்தத் தலைமையின் தொடர்ச்சி வீரமணியார்…
இல்லாத கடவுளை எதிர்த்தார் – அய்யா இருக்கின்ற மனிதனை நினைத்தார்!
பெண்ணின பெருமையை மதித்தார் – அதைப் போற்றா ஆண்களை எதிர்த்தார்.
மூடத் தனங்களைப் புதைத்தார் – அறிவின் மூலதனங்களை விதைத்தார்
ஜாதியின் ஆதியை அழித்தார் – இங்கு சமூக நீதியை வளர்த்தார்
பெரியார் ஏற்றிய சுடரை வீரமணியார் பிடித்தார் – அதைச் சூரியனாக வளர்த்தார்.
கண் பார்வை குறைந்திட்ட பொழுதும் – பூதக் கண்ணாடியில் புத்தகம் படித்தார்.
தன்மான இயக்கம் நடக்க, கைத் தடி கொண்டு நின்றவர் நடந்தார்
மூச்சினை இழக்கும் வரையில் – அய்யா மேடையில் முழங்கிச் சிலிர்த்தார்
உயிர் நொடி கரையும் வரையில் நம்மை உயர்த்திட உயர்த்திட நினைத்தார்
பெரியார் ஆற்றிய பணியை வீரமணியார் தொடர்ந்தார்,
அந்த தியாகத்தில் தன்னையே இழந்தார்…
– பழனிபாரதி