இலங்கையில் உள்ள மலையகத் தமிழரின் நிலையையும் அதே மலையகத் தமிழரின் சாதி, குலத்தைச் சேர்ந்த இந்தியத் தமிழரையும் எண்ணிப் பார்க்கிறேன். இந்திய வம்சாவழித் தமிழர்களின் வழித் தோன்றல்கள் இன்று வரை தோட்டத் தொழில் செய்பவர்களாகவும் இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாரிசுகள் வெளிநாடுகளில் அதே இலங்கைத் தமிழர்களோடு சேர்ந்து ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் அளவுக்கு வளர்ந்தது எவ்வாறு? வெறும் நூறு வருடங்களில் இந்தப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்ப்படுத்தியது யார்? திராவிட இயக்கங்களா இல்லை காஞ்சி மடமா?
Nishanthan Sathanandasivan
சிறுவர்மலரில் குழந்தைகளின் படங்களை வரிசையாக வெளியிடுவார்கள். அதுபோல் டெங்குவால் இறந்த சின்னச் சின்ன குழந்தைகளின் படங்களை தினமும் செய்தித்தாளைப் படிக்கும் போதெல்லாம் மனம் பதறுகிறது. ஒவ்வொருநாளும் இருபது, முப்பது மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தும் கொசுக்களை அழிக்கவோ, சுகாதாரத்தை மேம்படுத்தவோ எந்த துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை. பொது இடத்தில் நின்றாலே தேன்கூட்டில் தேனி மொய்ப்பதைப் போல கொசு மொய்க்கிறது. ஆனால் டெங்கு பற்றி பயப்படவேண்டாம் தைரியமாக இருங்கள் என தினமும் வெற்று அறிக்கை மட்டும் வெளிவருகிறது! தைரியமாய் வாழலாம், தைரியமாக எப்படி சாவது?
Don Ashok 7.31 pm / 26.10.2012
மதுரை ஆதின மடம், திருப்பனந்தாள் மடம் போன்றவற்றை அரசுடைமையக்கும் கோரிக்கைக்கு முன்பு முதலில் காஞ்சி சங்கராச்சாரி மடத்தை அரசு கையகப்படுத்த ஆவணச் செய்யுங்கள்….
அரசுடைமையாக்கும் கோரிக்கையில் கூட சாதியம்….
Mani Varma oct 26/6.06 am
வாழைத்தோப்பே நகந்து வர்ற மாதிரி இருக்கு லாரிகளுக்கு கட்டின வாழை மரம்… ரோடு பார்க்க முடியாம டிரைவர் எட்டிப்பார்த்துட்டே போறார்..
பக்தி கண்ணை மறைக்கிறது
Siddhan Cbe 23.10.2012 / 2.256.pm
கரண்டும் கரண்ட் சார்ந்த இடமும் – சென்னை! இருளும் இருள் சூழ்ந்த இடமும் தமிழகம்!
ramesh venkatapathy @KOVAI_KAMAL 5:59 PM – 13 Oct 12
நண்பர் ஒருவர் புது மொபைல் வாங்கினார். கடைக்காரர் சொன்னார் “புது மொபைலை தொடக்கத்துல 8 மணி நேரம் சார்ஜ் போடணும் சார்”
நண்பர்: “அதுக்கு நான் சென்னைக்குதான் சார் போகணும்”
Ezhil Arasan October 12 at 6:12pm
செந்தில்ராஜ்
பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால், சகுனம் என்று கருதலாம். அப்படிக் கருதினால் நீங்கள் மனிதனல்ல, சுண்டெலி…
= பெஞ்சமின் பிராங்க்ளின்
Deepa Vennila
பெண்களின் அடையாளமாக சிறப்பாக பூஜை செய்ய…
ஒப்பனைகள் செய்ய.. இப்போது சமையலில் கில்லாடிகளை இனங்காட்டுகிறார்கலாம் …
விஜய் தொலைக்காட்சியில் …
இராயிரம் ஆண்டுகால வரலாற்றை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துகிறார்கள்…
சுவைத்து முடிவு சொல்ல ஆண் நடுவர்கள்…
Mani Varma October 14 at 8:27pm
வாகன ஓட்டிக்கு ஹெல்மெட் எப்படி முக்கியமோ அதுபோல் சமூக வலைத்தளங்களில் எழுதுவோருக்கு நாகரிகமான வார்த்தைகள் முக்கியம்,பிரச்சினைகள் எழுந்தால் அவை தக்க பாதுகாப்பு கவசமாக அமைந்திடும்
ராஜேஷ் தீனா 24அக்டோபர் 2012 இரவு 11:08 மணி
அஸ்டின் சாமுவேல்
பரணிதரன் கலியபெருமாள்