அய்ப்பசி திங்களின் தீபாவளி நம்முடையதன்று. அது நரக சதுர்த்தசி என்ற பெயரால் வந்தேரியாய்ப் புகுந்து கொண் டது. தீபாவளி என்றால் விளக்கு வரிசை அல்லது மாலை என்று பொருள். (தீபம்_ஆவலி) இது வட மொழிச் சொல். நாம் இந்நாட் கொண்டாடும் அய்ப்பசித் தீபாவளியில் விளக்குகளை வரிசையாக ஏற்றிவைக்கிற வழக்கம் காணவில்லை.
சி.கே. சுப்பிரமணிய (முதலியார்) பி.ஏ., (பொங்கலும் தமிழர் விழாக்களும், செந்தமிழ்ச் செல்வி, ஆறாம்சிலம்பு -_1928)
***
அய்ப்பசித் திங்களில் மதுரை நாயக்கர்கள் தீபாவளிப் பெருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மக்களும் இதைச் சிறப்பாகக் கொணடா டினார்கள். இதுகுறித்து வெவ் வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும் தீபாவளிக்கும் தொடர்பே இல்லை. தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் புத்தாடை உடுத்திப் பலவகைச் சிற்றுண்டிகளை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். தீபாவளி தமிழகத்தில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட் டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ் நாட்டு மக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கற்பட்டு, வடஆற்காடு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.
மதுரை நாயக்கர் வரலாறு (பக்கம் 430)
அ.கி.பரந்தாமனார்.
தகவல்: இரா.கு. இராமசாமி, இராவத்தூர், கோவை