முகநூல் பேசுகிறது

அக்டோபர் 16-31

நெல்லையில் மழை பெய்ய வேண்டி….. கல்லூரி மாணவ _ மாணவிகள் பஞ்ச பூத வழிபாடு (செய்தி)

??????????
அறிவியல் பாடத்தை படிப்பது மட்டும் போதாது…

அறிவியலை அறிவில்லாமல் படித்தால் இப்படித்தான்.

படிப்பறிவு வேறு பகுத்தறிவு வேறு.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் அனைவருமே “அறிவிலிகள்”

பனங்காட்டு நரி 3.16 பிற்பகல் செப் 28,2012

#############

ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத்தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.!

surya born to win  oct. 6, 2012  3.36 am

#############

 

செய்தி: கன்னியாகுமரியில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பிராமணர் சங்க அட்ஹாக் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

கேள்வி: கன்னியாகுமரியக் களங்கப்படுத்த இப்படி ஒரு அய்டியாவா?

–    அட்டாக் திராவிடா, சென்னை.

#############

சுருங்கக் கூற வேண்டுமானால்,பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள். இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன், சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்.
ஹென்றி பெவரிட்ஜ் (“”விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம்”” 1895)

– நாம பங்காளிகள் வலைப்பூ…

#############

 

மேலே ஒரு முனிவர் தவம் செய்வது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது, கீழே, அதே கோலத்தில் பூனை ஒன்று தவம் செய்து கொண்டு இருக்கின்றது, இதில் கவனிக்கப்படவேண்டியது, அந்த பூனையை தெய்வமாக நினைத்து எலிகள் அதை சுற்றி வணங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த கதையின் முடிவு என்ன? எலிகள் ஏமாறும் நேரம் பார்த்து பூனை அவற்றை விழுங்கி விடும். அது போல, போலி சாமியார்களிடம் மக்கள் செல்லும்போது என்ன நேரும் என்பதை நாம் உணரவேண்டும் என்பதை ஏழாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்ட மாமல்லபுரம் சிற்பங்கள் நமக்கு கூறுகின்றது !. கல்லிலே கலை வண்ணம் மட்டுமா கண்டுள்ளோம்?

Sasi dharan   sep 28,2012    7.12.pm

#############

கோயில் சொத்துகளை சரிவர பராமரிக்க
தெய்வ நம்பிக்கை உடைய (!)
திறமையானவர்கள் (!)
இந்து இயக்க பொறுப்பாளர்கள்??? கொண்ட குழுவை ஏற்படுத்த வேண்டும்.   _ இராமகோபாலன் —

—எப்படி ?????

Accusedகாஞ்சி சுப்பிரமணியன்
Accused  காஞ்சி தேவநாதன்
Accused  நித்தியானந்தா
போன்ற உத்தமர்களை வைத்தா ?????

பனங்காட்டு நரி ஆகஸ்ட் 26, 2012 9.50 பிற்பகல்

#############

நகைக் கடைகளும், தமிழ்நாடு ஹீரோக்களும்…

மலையாளிகளின் நகைக் கடைக்காக தமிழ் நடிகர்கள் ஒருவருக்கொருவர் விளம்பரம் மூலம் அடித்துக் கொள்கிறார்கள். பிரபு, விஜய் போன்றோரை எல்லாம் (அவர்கள் மாதிரி வேடமிட்ட நபர்களை) மாதவன் போலிஸ் வேடமிட்டு நீங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று சொல்லி உதைக்கிறார். இதில் யார் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நான் சொல்ல தேவை இல்லை. ஆனால் மாதவன், பிரபு, விஜய் எல்லாம் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வருமானம் தமிழர்கள் வியர்வையும், ரத்தமும் சிந்தி சம்பாதிக்கும் கூலிப் பணம்தான். எனக்கும் இதில் நீண்ட நாட்கள் சந்தேகம் இருந்துக் கொண்டே இருக்கிறது. எப்படி மலையாளிகள் தொடர்ந்து பெரிய அளவில் நகைக் கடைகளை திறந்துக் கொண்டே இருக்கிறார்கள். இனி இந்தியாவில் இவர்கள் கடை நகைகளைத்தான் மக்கள் வாங்க வேண்டும், என்கிற மாயையே உருவாக்கி வருகிறது. இதிலும் எது போலி, எது அசல் என்று தெரியவில்லை. அரசு இதிலும் கொஞ்சம் தாமதமாகத்தான் விழிக்கும் போல் இருக்கிறது? எப்படியோ விழித்துக் கொண்டால் பரவா இல்லை.

அருண் தமிழ் ஸ்டுடியோ  செப் 24,2012  3.37 பிற்பகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *