பாதிரியார் ஒருவருடனான விவாதத்தின் போது கூறினார் :
கடவுள் மனிதனை தன்னைப் போலவே படைத்தார்… வெகு காலமாகவே அனைத்து மதங்களுமே கடவுள் மனிதனை தன்னை போலவே படைத்தார் என்பதில் ஒத்து இருக்கின்றன..
இயல்பாக ஒரு வாதத்தை அவர் முன் வைத்தேன்…
மனிதனது உடலும் உடலுறுப்புகளும் பரிணாமத்தில் அவனது வாழ்வியல் போராட்டத்தின் , வாழ்வியல் தேவையின் பொருட்டு வடிவமைந்தது… (உ.ம் முன்னங்கால்கள் கைகளாக பரிணமித்த பிறகு, கட்டை விரல் தனியாக பிரிந்தது , கைகளின் தேவையின் பொருட்டு )
எந்த உடல்பாகமும் தோரணைக்காக அமைந்தது கிடையாது , எல்லா உயிரினங்களுக்கும் அப்படியே…
பிரபஞ்ச வெளியில் நிறைந்திருப்பதாக சொல்லப்படும்
கடவுள் , மனிதனை போலிருக்கிறாரென்றால்..
இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது..
கடவுளுக்கு எதற்கு சிறுநீரகங்கள்?
கடவுளுக்கு எதற்கு இனப்பெருக்க உறுப்பு?
கடவுளுக்கு எதற்கு ஆசனவாய்?
கடவுளுக்கு எதற்கு சுவாசக்குழாய் , உணவுக்குழாய்
சிறுகுடல், பெருங்குடல் , நுரையீரல், இதயம், கைகள் ,கால்கள் எல்லாம் …?
கடவுளுக்கு இதெல்லாம் இருக்க வேண்டிய வாழ்வியல் தேவை என்ன?
மனிதனே கடவுளை படைத்தான் என்பதற்கு இதுவே சான்று…
வாதத்தைக் கேட்ட அவர் ஒரே பதில் கூறினார்..
பரம்பொருளையே கேள்வி கேட்கிறீர்களா நீங்கள் ?..
– அருண் பகத் (தனது முகநூல் பக்கத்தில்..)