Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரை அறிவோமா?

1)    தொடக்கம் முதல் இறுதிவரை தம்முடைய பொதுவாழ்வின் இலக்காகவும் அதை அடைவதற்கான வழிமுறையாகவும் பெரியார் கொண்டிருந்தவை யாவை ?

அ)    சாதியையும் வருணதர்மத்தையும் ஒழித்தல்  ஆ)    சாதியிருக்கும் வரை அதன் அடிப்படையில் வகுப்புரிமை பெற்றுச் சமூகநீதியை நிலைநாட்டல்  இ)    பகுத்தறிவு நெறியைப்  பரப்பி அதன் அடிப்படையில் கிளர்ச்சிகள் செய்தல்  ஈ)    மேற்கூறிய மூன்றும்.

2)    சமுதாயத்தின் எலும்புருக்கி நோய் போன்றவர் எவர் எனப் பெரியார் கருதுகிறார்?

அ)    அரசியல் மூலம் பணம், புகழ், பதவி முதலியவற்றைச் சம்பாதிக்கத் திட்டமிடும் கூட்டத்தினர்.  ஆ)    மூடநம்பிக்கையாளர்  இ)    மதவெறியர்  ஈ)    கறுப்புச் சந்தை, கள்ளக் கடத்தல் செய்வோர்

3)    ஆசையும் சுயநலமும் அற்றவனுக்கு எவை தேவையில்லை என்கிறார்,  பெரியார் ?

அ) பெண்ணும் பொருளும்   
ஆ) பட்டமும் பதவியும் இ) அரசியலும் பொருளியலும்   
ஈ) கடவுளும் மோட்சமும்

4)    வேண்டியன எல்லாம் எல்லோருக்கும் கிடைக்கப் பெரியார் கூறும் வழி யாது?

அ) ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது ஆ) ஒன்று அல்லது இரண்டு குழந்தைக்கு மேல் கூடாது  இ) வேளாண்மை எந்திரமயமாக்க வேண்டும்
ஈ) திட்டமிட்ட பொருளாதாரம் வேண்டும்

5)    முதல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவைச் சமர்ப்பித்த பெரியாரின் உற்ற நண்பர் யார்?
அ) 1951இல் மைய அரசின் சட்ட
அமைச்சராக  இருந்த அண்ணல் அம்பேத்கர்            ஆ) இராஜகோபாலாச்சாரியார்  இ) முகமது அலி ஜின்னா  ஈ) ஜெயப்பிரகாஷ் நாராயண்

6)    1940இல் தந்தை பெரியாரின் கட்டாய இந்தி நீக்கக் கிளர்ச்சி வெற்றி பெற்றபொழுது அதைப்பாராட்டித் தந்திகொடுத்து, வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஒரு உலகத் தலைவர் யார்?

அ) முகமது அலி ஜின்னா   
ஆ) பெர்னாட்ஷா
இ) கார்பச்சேவ்  ஈ) குருஷேவ்

7)    தந்தை பெரியாருடன் சேர்ந்து பணியாற்றிய காலத்தை அறிஞர் அண்ணா பின்வரும் தொடரால் குறிப்பிடுகிறார்.  அத்தொடர்

அ) எனது பொற்காலம்   
ஆ) எனது இனிய நாட்கள்
இ) எனது வசந்தம்   
ஈ) அந்தச் சிறந்த காலம்

8)    “பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும் என்ற பெரியாரின் கருத்து இடம் பெற்ற நூல்

அ) நியாயம் எங்கே?  ஆ) நீதி எது?
இ) நீதியின் நிழல்       
ஈ) நீதி கெட்டது யாரால்?

9)    ஆரியமத வண்டவாளம் என்ற தலைப்பிட்ட கட்டுரை இடம் பெற்ற பெரியாரின் நூல்

அ) இந்துமதத்தின் இழிவுகள்   
ஆ) தமிழர்கள் இந்துக்களா?
இ) இந்துமதமும் தமிழர்களும்   
ஈ) அர்த்தமற்ற இந்துமதம்

10) கீதையின் வண்டவாளத்தை வெளியிட ஆசைப்படுகிறேன் என்ற பெரியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய நூல்

அ) கீதை ஒரு போதை   
ஆ) கீதையா? கிறுக்கலா?
இ) பாதை மாறிய கீதை   
ஈ) கீதையின் மறுபக்கம்

 

ஜூலை 16-31 இதழில் வெளியான பெரியாரை அறிவோமா கேள்விகளுக்கான விடைகள்

1.ஈ,  2.இ,  3.ஈ,  4.ஈ,  5.ஈ,  6.ஆ,  7.அ,  8.இ,  9.ஈ,  10.ஈ.