(ஜூலை 16-31, 2012 இதழ் தொடர்ச்சி…)
ஸ்திரீகளும் ஸ்ரீ கிருஷ்ணரும்
வாருங்கள் விரதசீலகளான சுந்தரவதிகளே! நான் இந்த ஸ்ரீ நந்தவ்ரஜத்தில் ஆவிர்ப்பவித்த நாள் முதல் உங்களுடன் விருத்தியடைந்து கொண்டிருக் கின்றேன். இதுவுமன்றி எனது நிசாம்சத்தாலும் உங்களுடைய சம்பந்தத்தாலும் உங்களுள்ளும் புறம்புமாக வியாபித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் நானறியாத தர்மங்களுண்டோ? உங்கள் மனோவாக்குக் காய முதலிய சரீர குண தர்மங்களுக்கு நான் அன்யனோ? ஆகையால் நீங்கள் நன்றாயோசித்துப் பாருங்கள். என் விஷயத்தில் நாணிக் கூசத்தக்க வியவகாரம் எவ்வளவுமில்லை. மேலும் நீங்கள் யாவரும் விரத நிஷ்டைகளில் அன்புடையவர்களாயிருந்து, சாஸ்திரோக்த விதிக்கு வேறுபாடாக வஸ்திர ஈனமாய் இம்மகா புண்ய நதியில் இறங்கி ஸ்நானஞ் செய்யத் தகுமோ? ஆதலால் நீங்கள் தெரியாமல் நடந்ததைக் குறித்து பிராயச்சித்தமாக யாவருமிரண்டு கைகளை யுமெடுத்து அஞ்சலி செய்து உங்கள் வஸ்திரங்களை வாங்கி யுடுத்திக் கொள்ளுங்ளென்றார்.
இவ்விதமாகச் சொல்லிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனங்களைக் கேட்டு, இந்தக் கோபிகா ஸ்திரீகள் யாவரும் பிரணாமஞ்செய்ய வொப்புக்கொண்டு ஸ்வாமியினுடைய ஆக் கினைக்கு வித்யாசம் நேரிடுவதைத் தங்களுக்குள் யோசியாமல் வந்தனக் கிரமத்தை யுணராமல் ஒருகையினால் தங்கள் மர்மாவயங்களை மறைத்து மற்றொரு அஸ்தத்தைச் சேவிக்கத்தக்கதாகக் காட்டினார்கள். அப்படி கையைக் காட்டிய மாத்திரத்தில் ஸ்ரீ பகவான் கோபகன்னிகைகளைப் பார்த்து உங்கள் மனோரதங்கள் ஸ்பலமாகும் படிக்கும், விரதம் பங்கமில்லாமல் நிறைவேறப் பிராயச்சித்தத்தின் பொருட்டுஞ் சேவிக்கச் சொன்னதற்கு இன்னுமதிக குற்றமுண்டாகவே யொரு ஹஸ்த மெடுத்தீர்கள். அப்படி ஒரு கையெடுத்ததனால் ஸ்ரீ பாகவதபசாரம் உண்டாகும். இதற்கு விதி யாதொருத்தன் ஸ்ரீ பகவானைத் தரிசனஞ் செய்யும்போது வஸ்திரானனாகியும் அல்லது ஏகவஸ்திரனாகியும் அரையில் வஸ்திரத்தின்மேல் வஸ்திரத்தை யிறுக்கிக் கட்டாதவனாகியும் இருக்கிறானோ அவனுஞ், சிரத்தையற்று ஒரு கையைக் காட்டி எவன் வந்தனஞ் செய்கின்றானோ அவனும், மகா அபராதியாவர் களென்றும் எவனாவது ஒருவன் ஒருவேளை ஒருகை காட்டி வந்தனஞ் செய்வானாகில் அவனைத் தர்ம நிர்ணயம் அந்த ஹஸ்தத்தை அறுக்கும்படி சொல்லியிருக்கின்றது. நீங்கள் அது தெரியாமல் செய்தீர்கள். ஆதலால், அதிக அபராதிகளான நீங்கள், இந்த அபராதங்களெல்லாம் நிவாரண மாகும் பொருட்டு இரண்டு கரங்களையும் உயரவெடுத்துக்கொண்டு சீக்கிரமாகத் தண்டன் சமர்ப்பியுங்களென்று சொன்னார்.
அதைக் கேட்டு தம்மைத் தரிசித்தவர்களுக்கு தானென்கிற அகங்காரம் விடும்படிச் செய்து, ஆட்கொள்ளத்தக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பார்த்து, அவருடைய கடாக்ஷத்தினால் அகங்காரத்தை விட்டவர்களாய், சிறிதும் பற்றில்லாதவர்களுக்கே தமது நிஜஸ்வருப தரிசனந் தந்தருளத்தக்க ஸ்வாமியைக் குறித்து, இந்தக் கோபகன்னிகைகளும் அந்த ஸ்வாமியினுடைய நியமனப்படியே, பயபக்தி விசுவாசத்துடன் தங்களிரண்டு கரங்களையுஞ் சிரசின்மீது உயரவெடுத்துப் பக்தி பரவசர்களாய் ஸ்ரீ கிருஷ்ணா! சரணமென்று தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானுடைய கிருபாமாத்திர பிரசன்னத் வங்களைப் பெற்று, தங்கள் ஆடைகளையும் வாங்கியுடுத்திக் கொண்டு திருப்தியுள்ள மனமுடையவர்களாய் ஸ்ரீ கிருஷ்ணபகவானைப் பார்த்தாவென்கிற இச்சையுடையவர்களாய்ச் சலியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் ஸ்ரீ பகவானானவர் வாருங்கள் விரத நிஷ்டைகளை அநுஷ்டித்த மகா லட்சணவதிகளே! நீங்களே சொல்லாவிடினும் உங்கள் மனோரதங்கள் இன்னவையென்று எனக்கு நன்றாய்த் தெரியும்; நீங்கள் என்னைப் பார்த்தாவாக வரித்து, எனக்கு அடியார்களாய் எனது சாரூப்பியத்தை யடைந்து, சுகிகளாய்த் தனுகரண போகங்களையடைந்து அநந்தவிதவுபசார கைங்கர்யங்களைச் செய்ய வேண்டுமென்று கோரி, விரதத்தை யநுஷ்டித்தீர்கள். ஆகையால், சத்யமாகப் பலகாக்ஷியை இச்சித்து, மகா காமிய தேவதையாகிய அம்பிகா தேவியைக் குறித்து விரத மநுஷ்டித்ததற்குப் போகங்களும், என்னைச் சரணமடைந்ததற்குத் தேகாந்தரத்தில் முக்தியும், உங்களுக்கு ஸபலமுமாகும். நீங்கள் யாவரும் என்னைத் தியானித்துக் கொண்டு உங்கள் கிருகங்களுக்குச் செல்லுங்கள். இன்று முதல் அவரவர்கள் காலாநுகுணமாய் ஏகாந்த சமயங்களில் தியானித்து நினைக்குந்தோறும் நான் பிரசன்னனாய் உங்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்கின்றேனென்று கிருபையாகச் சொல்லி விடை கொடுத்தருளினார்.
அப்போது அந்தக் கோபகன்யா ஸ்திரீகளும் அவ்வண்ணமே மஹத்தாகிய சந்தோஷ முடையவர்களாகி, ஸ்ரீ பகவான் வஸ்திர அபகாரத்தினால் நாணம் விடும்படிச் செய்து பரிகாசமாகப் பேசினது முதலிய செய்கைகள் தங்களுக்கு விரத பங்கமில்லாமல் சிக்ஷபூர்வமாக நிறைவேறச் செய்து தமது மனோபீஷ்டங்களை பரிபாலித்து இரக்ஷிக்கின்றதின் நிமித்தமேயன்றி வேறில்லை யென்று நினைத்து, திருப்தியான மனதுடையவர்களாகி, யாவரும் சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானை விட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய் ஸ்ரீ பகவதாக்கினையினால் சம்பூர்ண இச்சைகளையடைந்து, அந்த ஸ்ரீ கிருஷ்ணபாதார விந்தங்களைச் சலனமில்லாத பக்தியுடன் தியானஞ் செய்துக் கொண்டு, தங்கள் சர்வேந்திரியங்களும் ஸ்ரீ கிருஷ்ண சௌந்தர்யங் களிற் செல்லத் தங்கள் தங்கள் கிருகங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானானவர் முன்போலவே தமது இஷ்டஜனங்களாகிய கோபாலர் களுடன் கூடி, இவ்வுபவனத்தைக் கடந்து சென்று, வெகுதூரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ பலராமரிடத்திற் சேர்ந்து அவருடனே அந்தப் பிருந்தாவன தூரப்பிரதேசங் களில் பிரவேசித்து, பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு சந்தோஷமாய் விளையாடினார்.
ஸ்ரீ சுகர் வாக்கியம்
ஹே ராஜபுருஷ சிரேஷ்டனே! சகல லோக சிகாமணியாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் தமது துணைவர்களாகிய கோபாலர்களுடன் புண்ய வசனங்களைப் பேசிக்கொண்டு சந்தோஷ சித்தராய், இலை, கனி முதலியவைகளால் விருத்தியடைந் திருக்கின்ற விருக்ஷங்களின் நிழலில் சஞ்சரித்துக் கொண்டு யமுனா நதி தீரத்தில் சகல கோபால கோகண சமேதராய் வந்து சேர்ந்தார். ஸ்ரீ பலராமகிருஷ்ண சகிதர்களான இந்தக் கோபாலர்கள் அந்த யமுனாநதியில் பிரவாகிக்கின்ற நிர்மலமாகியும், அதி சீதளமாகியுமிருக்கின்ற தீர்த்தத்தைப் பசுக் கூட்டங்களுக்குப் பானம் செய்வித்துத் தாங்களுமதிலிறங்கி மிகவுஞ் சந்தோஷத்துடன் ஸ்ரம நிவாரனமாகக் குளித்துத் தாபந் தீரத் தீர்த்தபானஞ்செய்து, அந்த நதியின் சமீபத்தில் ஒரு குளிர்ந்த தோப்பில் பசுக்களை மேயவிட்டு எல்லா கோபாலர்களும் பசியினால் பீடித்தவர்களாய், அவ்விருக்ஷங்களின் நிழல்களில் சஞ்சரித்து, ஓரிடத்தில் சுகாசனர்களாயிருக்கின்ற ஸ்ரீ பலராம கிருஷ்ண மூர்த்திகளைப் பார்த்து மகாவீர்யதேஜோ ஜயசாலிகளான ஸ்ரீ பல ராம கிருஷ்ணர்களே! நாங்கள் மிகவும் பசித்திருக்கின்றோம். எங்கள் பசிக்குச் சாந்தஞ் செய்து ரக்ஷிக்கக் கடவீர்கள் என்று பிரார்த்தித்த மாத்திரத்தில், ஜகதீஸ்வரராகிய ஸ்ரீ பகவானானவர் கம்ஸ மகாராஜனுக்குப் பயந்து குடும்ப சமேதர்களாய் அந்தப் பிருந்தாவனத்தின் ஒரு சார்பில் வந்து வானப்பிரஸ் தாசிரமிகளைப் போல வாசஞ் செய்துகொண்டு, சொர்க்க விச்சை யுள்ளவர்களாகி நல்ல கர்மங்களை வேதோக்த கிரமமாகவும், ரகசியமாகவும் செய்து கொண்டிருக்கின்ற பிராஹ்மணர் களினுடைய பத்னீ சமூகங்கள் தம்மிடத்தில் வைத்திருக்கிற பக்தி யதிசயங்களைக் குறித்துத் தாம் பிரசன்னராய், அவர்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்ய மனமுவந்து அந்தக் கோபாலர்களைப் பார்த்து சொல்லுகின்றார்.
– கி.வீரமணி
Leave a Reply