12 ஆம் வகுப்பு மாணவி உடைந்த கண்ணாடித் துண்டுகளின் மீது நடக்கும் இந்தக் காட்சி கோவை தனியார் பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்டது. (நன்றி:தி இந்து ஏப்ரல் 6,2012) விடுமுறைக் கால வகுப்பு ஒன்றில் மாணவிகளின் அச்சத்தைப் போக்கி ஊக்கம் அளிக்க உளவியல் பயிற்சியாக இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.“முதலில் பயந்தேன், ஆனால், அப்புறம் எதிர்பார்த்த அளவுக்கு பயமில்லாமல் போய்விட்டது என்று சொல்லியிருக்கிறார் இந்த மாணவி. இது மட்டுமல்ல, தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களில் நெருப்பின் மீது நடக்க வைத்து மன அச்சத்தைப் போக்கும் பயிற்சிகளை உளவியல் நிபுணர்கள் அளிப்பது தற்போது வழக்கத்திற்கு வந்துவிட்டது. எதார்த்த நிலை இவ்வாறு இருக்க கடந்த 11.7.2012 குமுதம் இதழில் முதல் மாணவி என்ற ஒரு சிறுகதை இளம்பெண்களைப் பிற்போக்குக் குழிக்குள் தள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்தது. மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு கோலம் போடத்தெரியவில்லை; இது பெரிய குறை என்பதுதான் அந்தக் கதையின் சாரம். பொய்க்கு ஒப்பனை செய்து புனைந்த இந்தக் கதைக்கு எதிராக உண்மை எழுந்து வந்தால் எப்படி இருக்கும்?
எதிர்க்கதை கோலம்