Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

தேசபக்தி

தேர்தல் வாக்குறுதிகள்
தேசிய கீதம்

கேட்டது வேலை கொடுத்தது பட்டம்
வேலையில்லா பட்டதாரி

சாதிக்கின்றன
சாதிக் கட்சிகள்
கசாப்பு ஆடுகள்

காணாமல் போனது
கடவுள் சிலை
தேடலில் பக்தன்

பட்டறிவு பகுத்தறிவு
சிந்தனைவாதி

உயிரில் வலி
உணர்த்தியது பலி
இறை வழிபாடு

கூடாத நாய்கள்
ஒன்று சேர்ந்தன
எலும்பு துண்டு

பலியானது
அறிவு
மொட்டை

பதுக்கல்
ஒதுக்கல்
அரசியல்

தொலைபேசி
தொல்லைப் பேசியானது
விபத்து

இராமன் பிறந்தான்
மனிதன் இறந்தான்
அயோத்தியில் மசூதி
கிளையில் மனித தலைகள்
போதிமரம்

குடும்ப சதி
கூட்டுக் கொள்ளை
சீர் வரிசை

விழித்ததும்
உறக்கம்
கள்ளிப்பால்

காமன்வெல்த் ஊழல்
வெளிப்பட்டது
தேசபக்தி                               –  அரசு

தமிழன் “இந்து”வாகி…!

தமிழன்
இந்துவாகி
இழந்தது –
சுயமரியாதை!

தமிழன் இந்தியனாகி
பெற்றது –
திருவோடு!

தெய்வபக்தி
தமிழனுக்குப்
பெற்றுத்தந்தது –
தேவடியாப்பிள்ளை பட்டம்!

தேசபக்தி
தமிழனுக்குப்
பெற்றுத்தந்ததோ –
தீவிரவாதிப் பட்டம்!

அரசியல்வாதி
தமிழனைத்
தேசியத்திடம்
விற்றுவிட்டான்!

ஆன்மீகவாதியோ
அவனை
ஆரியத்திடம் விற்றுவிட்டான்!

தமிழன் தன்னைத்தானே
விற்றுக்கொண்டது –
திருமணச் சந்தையிலே
மணமகனாகி!

தேர்தல் திருவிழாவிலே
வாக்காளனாகி!

சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

முப்பெரும் உண்மைகள்

அரசியல் பிழைத்தோனே
அறத்திற்குக் கூற்றுவன்

உரைசால் பத்திரின
தஞ்சடைகிறாள்
துறவாத துறவியிடம்

ஊழ்வினையே
வாழாது வாழவைக்கிறது
ஊழல்வாதியை.  – செழியரசு, தஞ்சை

பலவீனம்

மூன்று பக்கமும்
நம் நதிகள் சிறைபிடிப்பு
நான்கு பக்கமும் நம்மினம் சிதறடிப்பு. –  செழியரசு, தஞ்சை

அம்பேத்கர்

ஆச்சாரம் பார்ப்பதில்
ஊசிமுனையளவும்
பிறழாத வீட்டு திருமண அழைப்பின் மேலே
அம்பேத்கர் அஞ்சல்வில்லையாக
எல்லோர் வீட்டிற்கும்
சென்று கொண்டு இருக்கிறார். – மணிவர்மா