Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முகநூல் பேசுகிறது

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கௌம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கௌம்பனும்..
சூர்யா பார்ன் டு வின் ஜூலை 23, 2012 மாலை 4:03 மணி

லிமிசி அதிகாரிகள் இந்தியில் கையெழுத்து போடனும்னு அறிவிக்கிறதால வரும் ஆபத்தை விடவா இந்திய இறையாண்மைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து வந்துவிடப் போகிறது?
– டான் அசோக் ஜூலை 23, 2012 இரவு 8:41 மணி

கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணறத ஏற்கிற பெரும்பான்மையான “அறிவு” ஜீவிகள், நடிகர்களின் ரசிகர்கள் கட் அவுட்ல் பால் ஊற்றுவதை அறிவின்மை எனக் கூறுவதே ஆன்மிக அறிவுடைமை. _- ரகுநாத் ரத்னம் ஜூலை 14, 2012 மதியம் 1:05 மணி

இரவில் வெளியில் செல்லாதே என உங்கள் மகளுக்குச் சொல்லாதீர்கள். அதற்குப் பதில் உங்கள் மகன்களுக்கு பாடம் நடத்துங்கள்.

-பகிர்ந்தவர்: பண்பொளி கண்ணப்பன், ஜூலை 17, 2012 இரவு 11:36 மணி


இந்திய மக்களே, இந்திய அரசே !

மொழித் தீண்டாமையை அறவே ஒழிப்போம்! தாய் மொழி உரிமைகளை காப்போம் ! மொழி சமரசத்தை போற்றி பாதுகாப்போம் !

ஹிந்தி அல்லாத பிற மொழிகளையும், பிற மொழியினத்தவரையும் மதிப்போம் !
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவோம் ! ‘ஹிந்தி மட்டுமே’ என்றே மாயக் கோட்பாட்டை உடைப்போம் !

இதை அனைவருக்கும் பரப்புங்கள்.

_- ராஜ்குமார் பழனிச்சாமி ஜூலை 14, 2012 இரவு 7:22 மணி