புகழ்பெற்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர் தாராசிங் (வயது 83) ஜூலை 12 அன்று மரணமடைந்தார்.
தமிழ்க் கணினி உலகிற்குப் பெரும் பங்களிப்பை நல்கிய சாஃப்ட் வியூ கணினிக் கல்வியக நிறுவனரும் தி.க.வின் பெரியார் விருது பெற்றவருமான ஆண்டோ பீட்டர் (வயது 45) ஜூலை 12 அன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
தற்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியே மீண்டும் அப்பதவிக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று ஜூலை 14 அன்று அறிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை ஜூலை 14 அன்று நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது.
இந்திய விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 15 அன்று கஜகஸ்தான், பைகானூர் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்குப் புறப்பட்டார்.இது இவரது இரண்டாவது பயணமாகும்.
இந்தியக் குடிஅரசுத் துணைத்தலைவருக்கான தே.ஜ.கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என ஜூலை 16 அன்று அறிவிக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் தனிநீதிமன்ற நீதிபதியின் நியமனத்தை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா,சசிகலா ஆகியோர் தொடர்ந்த வழக்கை ஜூலை 17 அன்று பெங்களூரு தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 ஆவது இந்தியக் குடிஅரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூலை 22 அன்று நடந்தது.இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தே.ஜ.கூட்டணி வேட்பாளரை விட , அய்.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி 69 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மத்திய அரசின் நீர்வள ஆணையத்தின் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள உச்சநீதிமன்றம் ஜூலை 23 அன்று அனுமதி அளித்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி (வயது 97) ஜூலை 23 அன்று காலமானார்.
இந்தியாவின் 13 ஆவது குடி அரசுத்தலைவராக பிரணாப் முகர்ஜி ஜூலை 25 அன்று பொறுப்பேற்றார்.