இணையத்தில் விடுதலையின் போராட்டம்

ஆகஸ்ட் 01-15

விடுதலை  இதழ் எனக்கு 1980 களின் இறுதியில்  அறிமுகமாகிப் படித்து வந்தாலும்,1983 முதல் தினந்தோறும் படித்து வந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.நான்கு பக்கங்கள் கொண்ட விடுதலை இதழில் தொடங்கிய எனது பயணம்

தற்போது இணைய இதழ் (VIDUTHALAI E-PAPER) மூலமாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் விடுதலை இதழை நிறுத்தி விடலாமா? என்று பெரியார் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் 1962 ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று நடத்தி,கடந்த சில ஆண்டுகளாக பல வண்ணங்களில் 8 பக்கங்களுடன் வெளிவருவது மட்டுமல்லாது. தினந்தோறும் இதழ் அச்சாகும் அதே வேளையில் இணைய இதழாகவும் (VIDUTHALAI E-PAPER) மலர்ந்து வருவதைப் பார்க்கும் போது தமிழர்தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அய்யாவின் உழைப்பின்  பெ(அ)ருமையை என்னவென்று சொல்வது?.     2004 ஆம் ஆண்டு முதல் எனக்கு கணினி அறிமுகமாகி டயல் அப் (VIDUTHALAI E-PAPER) என்ற முறையில் இணைய இணைப்பின் மூலம்  இ-மெயில் மற்றும் ஒரு சில பணிகளைச் செய்து வந்தேன். 2007 ஆம் ஆண்டு (broad band) அகலவரிசை இணைய இணைப்புக் கிடைத்த போது நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் ஓவியா (thamizhoviya.blogspot.com) வலைப்பூ  தொடங்கி அதில் பெரியார் கருத்துகள் மற்றும் விடுதலை இதழில் வளிவரும் கட்டுரைகள், செய்திகளை வெளியிட்டு வந்தேன்.

எல்லா இடத்திலும் தன் ஆதிக்கக் கொடுக்கைப் பரப்பியிருந்த பார்ப்பனியம் இணையதளத்திலும் தனது விஷ(ம)க் கொடுக்கை அங்கிங்கென்னாதபடி எங்கும் பரப்பியிருந்தது.

வலைப்பூவில் பெரியாரின் கருத்துகளை பதிவிட்டபோது வந்த எதிர்ப்பு இருக்கிறதே! யப்பப்பா… சொல்லி மாளது. தந்தைபெரியாரையும், பெரியாரியலை உலகமயமாக்க ஓயாது உழைத்து வரும் தமிழர்தலைவரையும்  கொச்சைப்படுத்தி வந்த பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா?  பார்ப்பனர் களின் கொச்சையான அனைத்து விமர்சனங் களையும் நயத்தக்க நாகரிகமாக,பெரியார் தத்துவப்படியும், தமிழர்தலைவரின் கருத்துக்களின் துணையுடனும்  அதை எதிர்கொண்டு விளக்கமளித்தேன்.

படிக்கும் வாசகர்களும் பார்ப்பனியத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து  இன்று 343 பின்பற்றுபவர்களுடன் (FOLLOWERS)  மற்றும் 5,81,241 பேர் படித்துக் கொண்டிருக்கும்  வலைப்பூவாக தமிழ் ஓவியா (thamizhoviya.blog spot.com) வளர்ந்து கொண்டிருக்கிறது. 22-.7.-2012 நிலவரப்படி தமிழ்மணம் திரட்டியில் 7 ஆவது இடத்தில் உள்ளது தமிழ் ஓவியா. இதற்கு முழு முதற்காரணம் விடுதலை இதழை இணையத்தில் கொண்டு வந்து பெரியாரை உலகமயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே.

– தமிழ் ஓவியா மாரிமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *