சங்ககாலம் பொற்காலமா? – ஒரு பகுத்தறிவுப் பார்வை

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

எதனைச் சங்ககாலம் என்பது:

சங்ககாலத் தமிழர் வாழ்வியல்  _ பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னர் சங்கம் என்பது எந்தச் சங்கத்தைக் குறிக்கும்? என்று தெளிவுபடுத்துவது தேவை.

ஏற்கெனவே இருந்ததாகக் கூறப்பட்டு அவை கடற்கோளால் கொள்ளப்பட்டுப் போயின என்பது நமக்குத் தேவையில்லை.