பெண்களை அடிமை இயந்திரமாக்காதீர்! – தந்தை பெரியார்

தோழர்களே! இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு சீர்திருத்த முறை கொண்ட திருமணமேயாகும். சீர்திருத்தம் என்பது இன்று உலகில் திருமணம் என்கின்ற துறை மாத்திரம் அல்லாமல், மற்றும் உலகில் உள்ள எல்லாத்துறையிலும் யாருடைய முயற்சியுமில்லாமல் தானாகவே ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. தொழில் முறையில் கையினால் செய்யப்பட்ட வேலைகள் யந்திரத்தினால் செய்வது என்பது எப்படித் தானாகவே ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து அது நாளுக்கு […]

மேலும்....

விடுதலைக்குத் தடையான மதமும், சடங்குகளும்! – தந்தை பெரியார்

“நான் இவ்வூருக்கு இதற்குமுன் இரண்டு தடவை வந்திருக்கிறேன், இது மூன்றாம் தடவை, தலைவர் சொல்லியபடி நான் இச்சுயமரியாதை இயக்கத்தைக் குறித்து பல விடங்களில் பேசி வருகிறேன். நாம் உண்மையில் விடுதலை பெற்று வாழ விரும்புவோமானால், சுயமரியாதை உணர்ச்சி நமக்கு வேண்டும். மற்ற நாடுகளில் விடுதலை பெற்று வாழும் மக்களிடம் சுய மரியாதை உணர்ச்சியே மிகுந்திருக்கிறதென்பதைச் சரித்திர வாயிலாகக் காணலாம். மற்ற நாடுகள் 300 அல்லது 400 வருஷங்களுக்கு மேல் அடிமைப்பட்டு சுயமரியாதை கெட்டு வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. […]

மேலும்....

பெண்களுக்குத் தற்காப்பு

– தந்தை பெரியார் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா, என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் “மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும்’’ என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார். மாகாண சர்க்கார்கள் இத்துறையில் எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதீக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர். ஆங்காங்கு இரண்டொரு பெண்களும் மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள் “எங்களுக்கு எந்த விடுதலையும் […]

மேலும்....

மே தினம் என்றால் என்ன? – தந்தை பெரியார்

தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா […]

மேலும்....

திருவாங்கூரும் பார்ப்பனியக் கொடுமையும்

– தந்தை பெரியார் திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்ஜியமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பனக் கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள், உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக, ஜாமீன் பறிமுதல் […]

மேலும்....