கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – பிறப்பு 29.11.1908

கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், “இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டத் தகாததாகிவிடும்’’ என்று எழுதினார். இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

மேலும்....

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைவு 30.8.1957

திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் சிறப்பு என்பது ‘திரைப்படத்துறை’யில் அறிவுப் பிரச்சாரம் செய்ததும், அத்துறையில் ஈட்டியதை, வாரி வழங்கியது என்பதாகவும்தான் அமைந்துள்ளது. கலைவாணர் ஒரு தனி மனிதரல்லர்; அவர் ஒரு சகாப்தம்! அவரோடு அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சகாப்தம் இனி தோன்றுவது கடினம். என்னுடைய ஆசிரியர் ‘குடி அரசு’ என்று கூறிய கொள்கைக் கோமான்! […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவு-30.8.1957

கலைவாணர் வெறும் நடிகராக மட்டும் வாழவில்லை, உலகத்தைத் திருத்திய உத்தமராக – தாமும் நல்லவராக – மற்றவர்களையும் திருத்துபவராக கருத்துக் கருவூலமாக வாழ்ந்தார். – தந்தை பெரியார்

மேலும்....

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

“இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில் ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் லெனின் செய்ததுபோன்ற புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும், கதைத்துறையிலும், இசைத்துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார்.’’ – தந்தை பெரியார்

மேலும்....