கல்வி வள்ளல் காமராசர் மறைவு : 2.10.1975

இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 17.7.1961)

மேலும்....

பெருந்தலைவர் காமராசர்!

கல்விக்கண் திறந்தவரே காமராசர்! கற்காத மேதையிவர்; கரும வீரர்; எல்லார்க்கும் இலவசமாய்க் கல்வி தந்தார்! இந்நாட்டின் மேன்மைக்கே உழைத்து வந்தார்! பண்பாளர் மூன்றுமுறை முதல்வர் ஆனார்! பகலுணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்! ஒன்பதாண்டுச் சிறையினிலே கழித்தார்! நாட்டின் ஒப்பற்ற விடுதலைக்கே பாடு பட்டார்! அணைக்கட்டுப் பற்பலவும் அமைக்க லானார் அனைவரது பாராட்டும் புகழும் பெற்றார் இணக்கமுற வேளாண்மைத் தொழிலுக் காக ஏற்புடைய நீர்வளத்தைப் பெருக்க லானார்! எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய் என்றென்றும் திகழ்ந்தவரே காம ராசர்! […]

மேலும்....